அல்டிமேட் சுவையில் வெந்தயக் குழம்பு - வாழைத்தண்டு புளிப்பச்சடி செய்யலாமா?

fenugreek gravy-banana stem puli pachadi
fenugreek gravy-banana stem puli pachadi
Published on

ன்றைக்கு சுவையான வெந்தயக்குழம்பு மற்றும் வாழைத்தண்டு புளிப்பச்சடி ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

வெந்தயக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்.

வெந்தயம்-1 கப்

எண்ணெய்-தேவையான அளவு

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி

உளுந்து-1 தேக்கரண்டி

வெந்தயம்-1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்-5

மிளகு-1 தேக்கரண்டி

சீரகம்-1 தேக்கரண்டி

கருவேப்பிலை-சிறிதளவு

பூண்டு-5

துருவிய தேங்காய்-1 கப்

பெருங்காயத்தூள்-சிறிதளவு

தாளிக்க,

கடுகு-1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்-5

பூண்டு-10

சின்ன வெங்காயம்-15

வெங்காயம்-1

மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி

மல்லித்தூள்-1 தேக்கரண்டி

தக்காளி-1

புளித்தண்ணீர்-1 கப்

வெந்தயக்குழம்பு செய்முறை விளக்கம்.

முதலில் 1 கப் வெந்தயத்தை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 5, சீரகம் 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, பூண்டு 5, பெருங்காயத்தூள் சிறிதளவு, துருவிய தேங்காய் 1கப் சேர்த்து வதக்கிவிட்டு எடுத்து மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 5, ஊற வைத்த வெந்தயம், பூண்டு 10, சின்ன வெங்காயம் 15, நறுக்கிய வெங்காயம் 1, மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டு நறுக்கிய தக்காளி 1 சேர்த்துவிட்டு புளித்தண்ணீர் 1 கப் கரைத்து வைத்ததை ஊற்றி தண்ணீர் சிறிது விட்டு கொதிக்கவிடவும். கடைசியாக அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால் சுவையான வெந்தயக் குழம்பு தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

வாழைத்தண்டு புளிப்பச்சடி செய்ய தேவையான பொருட்கள்.

பச்சை மிளகாய்-4

தேங்காய்-1 கப்

கடுகு-1 தேக்கரண்டி

புளித்தண்ணீர்-1 கப்

உப்பு-தேவையான அளவு

மஞ்சள் தூள்-சிறிதளவு

வாழைத்தண்டு-1 கப்

தாளிக்க,

தேங்காய் எண்ணெய்- சிறிதளவு

கடுகு-1 தேக்கரண்டி

வெந்தயம்-1 தேக்கரண்டி

கருவேப்பிலை-சிறிதளவு

வாழைத்தண்டு புளிப்பச்சடி செய்முறை விளக்கம்.

முதலில் மிக்ஸியில் பச்சை மிளகாய் 4, தேங்காய் 1 கப், கடுகு 1 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் 1 கப் புளித்தண்ணீரை கரைத்து எடுத்துக் கொண்டு அதில் உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் சிறிதளவு, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு 1 கப்பை சேர்த்து வேகவிடவும்.

இப்போது நன்றாக கொதி வந்ததும் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பிறகு தேங்காய் எண்ணெய்யில் கடுகு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, வெந்தயம் 1 தேக்கரண்டி தாளித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான வாழைத்தண்டு புளிப்பச்சாடி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
கோடைக்கு சூப்பர் கூலான மில்க் சர்பத் - ப்ரூட் மிக்ஸர் ஜூஸ் செய்யலாம் வாங்க!
fenugreek gravy-banana stem puli pachadi

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com