
இன்றைக்கு சூப்பர் கூலான மில்க் சர்பத் மற்றும் ப்ரூட் மிக்ஸர் ஜூஸ் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படிசெய்யறதுன்னு பார்ப்போம்.
1. மில்க் சர்பத் செய்ய தேவையான பொருட்கள்
சர்க்கரை-1 கப்
பால்-1 லிட்டர்
குங்குமப்பூ-1 தேக்கரண்டி
அரைத்த பாதாம்-1 தேக்கரண்டி
பாதாம்-10
பிஸ்தா-10
சப்ஜா விதை-1கப்
பாதாம் பிசின்-1 கப்
செர்ரி, ஆப்பிள்-தேவையான அளவு
ஐஸ் கட்டிகள்-தேவையான அளவு
மில்க் சர்பத் செய்முறை விளக்கம்.
முதலில் ஃபேனில் 1கப் சர்க்கரைக்கு 4 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி நன்றாக கரைய விடவும். தேன் நிறம் வந்ததும் கொதிக்கும் தண்ணீர் உள்ளே சிறிது விட்டு இறக்கி வைத்து விடவும்.
இப்போது 1 லிட்டர் பாலை கெட்டியாக காய்ச்சிக் கொள்ளவும். அதில் 1 தேக்கரண்டி குங்குமப்பூ சேர்த்து கலந்துவிட்டு அதனுடன் அரைத்த பாதாம் 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு பாதாம் 10, பிஸ்தா 10 சிறிதாக நறுக்கி இத்துடன் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக ஆறியதும் இதை பவுலில் மாற்றிவிட்டு அதனுடன் செய்து வைத்திருக்கும் கேரமலை சேர்த்துக் கலந்துவிட்டுக் கொள்ளவும்.
இப்போது இதில் சப்ஜா விதைகளை ஊற வைத்து 1 கப் சேர்த்துக் கொள்ளவும். பாதாம் பிசின் ஊற வைத்து 1 கப் சேர்த்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய செர்ரி, ஆப்பிளை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு ஐஸ் சேர்த்துவிட்டு பிரிட்ஜில் வைத்து பிறகு பரிமாறவும். சுவையான மில்க் சர்பத் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
2. ப்ரூட் மிக்ஸர் ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்
சப்ஜா விதை-1 தேக்கரண்டி
பாதாம் பிசின்-1 தேக்கரண்டி
ஆப்பிள்-1 கப்
பைனாப்பிள்-1 கப்
மாம்பழம்-1 கப்
பப்பாளி-1 கப்
திராட்சை-1 கப்
தேன்-தேவையான அளவு
ஐஸ் கட்டி-தேவையான அளவு
ப்ரூட் மிக்ஸர் ஜூஸ் செய்முறை விளக்கம்.
முதலில் பாதாம் பிசின் 1 தேக்கரண்டி ஊற வைத்துக் கொள்ளவும். இன்னொரு பவுலில் சப்ஜா விதைகள் 1 தேக்கரண்டி சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். ஆப்பிள் 1 கப், பைனாப்பிள் 1 கப், திராட்சை 1 கப், பப்பாளி 1 கப், மாம்பழம் 1 கப் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்போது நறுக்கிய பழங்களை பவுலில் சேர்த்துக் கொண்டு அத்துடன் ஊற வைத்த பாதாம் பிசின் 1 கப், சப்ஜா விதை 1 கப், இனிப்பிற்கு தேவையான அளவு தேனை சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக தேவையான அளவு ஐஸ் சேர்த்து கலந்து விட்டு கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறினால் சுவையான ப்ரூட் மிக்ஸர் ஜூஸ் தயார். நீங்களும் இந்த கோடைக்காலத்திற்கு இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.