ருசியில் அசத்தும் பழ பஜ்ஜியும் , நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு வடையும்!

நேந்திர பழ பஜ்ஜியும், நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு வடையும் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ருசியில் அசத்தும் பழ பஜ்ஜியும் , நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு வடையும்!
Published on

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு, மைதா மாவு, கோதுமை மாவு - தலா அரை கப்

வில்லைகளாக நறுக்கிய நேந்திர வாழைப்பழம் - ஒன்று

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மாவுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக கெட்டியாக கரைத்து வைக்கவும்.

அதில் நேந்திர வில்லைகளை நன்றாக தோய்த்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

பழத்தில் இருக்கும் இனிப்பு இதற்கு போதுமானதாக இருப்பதால் தனியாக இனிப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

சட்டென்று செய்து டீயுடன் சாப்பிட கொடுக்கலாம்.

பனங்கிழங்கு வடை:

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய பனங்கிழங்கு - ஒரு கப்

கடலைப்பருப்பு, துவரம் பருப்பு - தலா அரை கப்

வர மிளகாய் -ஐந்து

சோம்பு- ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை அரிந்தது- கைப்பிடி அளவு

எண்ணெய், உப்பு -தேவையான அளவு

பொடியாக அரிந்த வெங்காயம்- அரை கப்

செய்முறை:

பனங்கிழங்கு துண்டுகளை மிக்ஸியில் இட்டு தண்ணீர் விடாமல் பொடித்து வைக்கவும்.

பருப்புகளுடன் வர மிளகாய், சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து அதனுடன் கிழங்கு மாவு மற்றும் உப்பு, அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, தனியா அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து வடைகளாகத் தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

வித்தியாசமான ருசியில் அசத்தலாக இருக்கும் இந்த வடை.

பனங்கிழங்கில் மட்டும் இந்த வடை செய்தால் கொஞ்சம் ஹார்டாக இருக்கும். அதையே பருப்புகளுடன் சேர்த்து செய்யும் பொழுது மிருதுவாக இருக்கும்.

இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்திற்கு நல்லது வயிற்றை அடைக்காது. நாரை குறைக்க வேண்டும் என்றால் கிழங்குகளை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கையால் எடுத்தால் வந்துவிடும். சிறிதளவு நாரே மாவில் தங்கும். அதனுடன் வடை செய்தால் அசத்தலாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ரவை வடை: சட்டென செய்யக்கூடிய சுவையான சிற்றுண்டி!
ருசியில் அசத்தும் பழ பஜ்ஜியும் , நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு வடையும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com