Tasty தயிர் சேமியா with இன்ஸ்டன்ட் மாங்காய் ஊறுகாய் செய்யலாமா?

yogurt semiya with instant mango pickle
yogurt semiya with instant mango pickle
Published on

ன்றைக்கு சுவையான தயிர் சேமியா மற்றும் இன்ஸ்டன்ட் மாங்காய் ஊறுகாய் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படிசெய்யறதுன்னு பார்ப்போம்.

தயிர் சேமியா செய்ய தேவையான பொருட்கள்.

சேமியா-1 கப்

தயிர்-1 கப்

பால்-1 கப்

உப்பு-தேவையான அளவு

எண்ணெய்-சிறிதளவு

கடுகு-1 தேக்கரண்டி

உளுந்து-1 தேக்கரண்டி

வரமிளகாய்-4

பெருங்காயத்தூள்-சிறிதளவு

இஞ்சி-1 துண்டு

பச்சை மிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு

கேரட்-1 கப்

தயிர் சேமியா செய்முறை விளக்கம்.

முதலில் சேமியா 1 கப் கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் செய்து வைத்திருக்கும் சேமியா சேர்த்து காய்ச்சிய பால் 1 கப், தயிர் 1கப் சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும்.

இப்போது கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வரமிளகாய் 4, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, பெருங்காயத்தூள் சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து தாளித்து சேமியாவில் சேர்த்து கலந்து விட்டு கடைசியாக துருவிய கேரட் 1 கப்பை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான தயிர் சேமியா தயார். நீங்களும் இந்த சிம்பிள் ருசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

இன்ஸ்டன்ட் மாங்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்.

மாங்காய்-1

வெந்தயம்-1 தேக்கரண்டி

கடுகு-1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள்-சிறிதளவு

தாளிக்க,

எண்ணெய்-தேவையான அளவு

கடுகு-1 தேக்கரண்டி

இன்ஸ்டன்ட் மாங்காய் ஊறுகாய் செய்முறை விளக்கம்.

முதலில் மாங்காய் 1 ஒன்றை எடுத்து நீளவாக்கில் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் வெந்தயம் 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது இதை மிக்ஸியில் சேர்த்து1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது நறுக்கி வைத்திருக்கும் மாங்காயில் பொடியை சேர்த்து அத்துடன் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்துவிடவும்.

இப்போது பேனில் நல்லெண்ணெய் தாராளமாக ஊற்றி அதில் கடுகு 1 தேக்கரண்டி சேர்த்து தாளித்து மாங்காயில் ஊற்றி கிளறிவிட்டால் டேஸ்டியான இன்ஸ்டன்ட் மாங்காய் ஊறுகாய் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
பாவக்காய் ஐஸ்கிரீம் (?!) & ஹனி கேக் ரெசிபிஸ் - அல்டிமேட் சுவை!
yogurt semiya with instant mango pickle

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com