இனிப்பு ராகி அடையும், கார ராகி அடையும்
இனிப்பு ராகி அடை
தேவை:
ராகி மாவு - 2 கப்
வெல்லத் தூள் - 1 கப்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் வெல்லத் தூளை சிறிது நீர் விட்டு கரைத்து, வடிகட்டி, பாகாக காய்ச்சவும். அதில் ஏலக்காய் தூள், ராகி மாவு, தேங்காய் துருவல் கலந்து பிசையவும். வாழை இலையில் எண்ணெய் தடவி, மாவை உருட்டி உருட்டி, தட்டி தட்டி, தோசை கல்லில் போட்டு, நெய் விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுத்தால், சுவையான, சத்தான இனிப்பு ராகி அடை தயார்.
****
கார ராகி அடை
தேவை:
ராகி மாவு - 2 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய சின்ன வெங்காயம் - 4 ஸ்பூன்
இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் போட்டு, தேவைக்கேற்ப நீர் விட்டு, உப்பு சேர்த்து கெட்டியாக பிசையவும். வாழை இலையில் எண்ணெய் தடவி, மாவை உருண்டைகளாக உருட்டி, தட்டி தோசைக் கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு, இரு புறமும் வேகவைத்து எடுத்தால், சுவையான கார ராகி அடை தயார்.
*******************
பச்சை கோசம்பரிகள்
கர்நாடக மாநிலத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் பண்டிகைகளில் முக்கிய இடம்பெறும் பச்சை கோசம்பரிகள் தமிழில் கோஸ் மல்லி எனப்படுகிறது.
கடலைப்பருப்பு இனிப்பு கோசம்பரி
தேவை:
கடலைப்பருப்பு - அரை கப்
சர்க்கரை - 3 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
செய்முறை:
கடலைப்பருப்பை களைந்து, சிறிது நேரம் ஊற வைத்து, நீரை வடிக்கவும். அதில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் தூள் கலந்து கிளறவும். சுவையான கடலைப்பருப்பு இனிப்பு கோசம்பரி தயார்.
****
பாசிப்பருப்பு கோசம்பரி:
தேவை:
பாசிப்பருப்பு - 1 கப் எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய் - 1 உப்பு - அரை ஸ்பூன் மல்லித்தழை நறுக்கியது - சிறிது செய்முறை: பாசிப்பருப்பை நீரில் களைந்து, சில நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். அதில் எலுமிச்சை சாறு, உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் கலந்து மல்லித்தழை தூவினால், சுவையான, சத்தான பாசிப்பருப்பு கோசம்பரி தயார்.