
இன்றைக்கு சுவையான குலுக்கி சர்பத் மற்றும் கேரட் கீர் ரெசிபிஸ் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படிசெய்யறதுன்னு பார்ப்போம்.
1. குலுக்கி சர்பத் செய்ய தேவையான பொருட்கள்.
சியா விதைகள்-1 தேக்கரண்டி
இஞ்சி-1 துண்டு
சர்க்கரை-3 தேக்கரண்டி
எழுமிச்சைப்பழம்-1
பச்சை மிளகாய்-1
சோடா-தேவையான அளவு
புதினா-சிறிதளவு
ஐஸ்கட்டி-தேவையான அளவு
குலுக்கி சர்பத் செய்முறை விளக்கம்
முதலில் ஒரு பவுலில் 1 தேக்கரண்டி சியா விதையை 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கண்ணாடி கிளாசில் ஒரு எழுமிச்சை துண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு, பச்சைமிளகாய் 1, சர்க்கரை 3 தேக்கரண்டி, எழுமிச்சை சாறு சிறிதளவு பிழிந்துவிட்டு தேவையான அளவு ஐஸ்கட்டிகளை சேர்த்துக் கொள்ளவும்.
இதில் புதினா சிறிதளவு, ஊற வைத்த சியா விதைகளை சேர்த்துவிட்டு தேவையான அளவு சோடா ஊற்றி நன்றாக குலுக்கி விடவும். அவ்வளவு தான் டேஸ்டியான குலுக்கி சர்பத் தயார்.
நீங்களும் கோடைக்கு இந்த ரெசிபியை வீட்டில் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
2. கேரட் கீர் செய்ய தேவையான பொருட்கள்.
கேரட்-2
பால்-1 லிட்டர்
குங்குமப்பூ-சிறிதளவு
ஏலக்காய் தூள்- 1 தேக்கரண்டி
சர்க்கரை-5 தேக்கரண்டி
பாதாம்-தேவையான அளவு
கேரட் கீர் செய்முறை விளக்கம்.
முதலில் 2 கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது வெந்த கேரட்டை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு சேர்த்து பேஸ்டாக அரைத்து அதை 1 லிட்டர் பாலில் சேர்த்து கலந்துவிட்டு கொதிக்க விடவும்.
இதில் ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, பாதாம் பொடியாக நறுக்கியது சிறிதளவு, சர்க்கரை 5 தேக்கரண்டி, குங்குமப்பூ சிறிதளவு சேர்த்து கலந்துவிட்டு இதை பிரிட்ஜில் 3 மணி நேரம் வைத்து எடுத்து பரிமாறலாம். அவ்வளவு தான் சுவையான கேரட் கீர் தயார்.
நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.