சிவப்பரிசி இனிப்பு கொழுக்கட்டை:
தேவையானவை:
சிவப்பரிசி - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
வெல்லத் தூள் - 1/2 கப்
நெய் - 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2ஸ்பூன்
செய்முறை:
சிவப்பரிசியை களைந்து, நீரை வடித்து விட்டு, துணியில் பரவலாக போட்டு நிழலில் உலர்த்தவும். பிறகு மிக்ஸியில் மாவாக அரைக்கவும். அந்த மாவை வாணலியில் வறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் நீர் விட்டு, கொதித்ததும், வெல்லத்தூள் சேர்க்கவும். அதில் சிவப்பரிசி மாவு, நெய், தேங்காய்த் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறி கெட்டியானதும் இறக்கி, கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான சிவப்பு அரிசி இனிப்பு கொழுக்கட்டை தயார்.
சிவப்பரிசி காரப்புட்டு:
தேவையானவை:
பதப்படுத்திய சிவப்பரிசி மாவு - 1 கப்
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
சிவப்பரிசி மாவை வறுத்து, சலித்து, தண்ணீர் தெளித்து, பிசிறி, ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு அதில் உப்பு, மிளகு சீரகத்தூள், தேங்காய் துருவல் சேர்த்துப் பிசைந்து, இட்லி தட்டில் துணி விரித்து, மாவை நிரப்பி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சத்தான, சுவையான சிவப்பரிசி காரப்புட்டு தயார்.