ரெட் வெல்வெட் கேக் ரெசிபி.. செய்வது ரொம்ப சுலபம்!

Red velvet cake recipe.
Red velvet cake recipe.

பேக்கரிக்கு சென்றாலே அனைவரும் விரும்பி வாங்கி சாப்பிடுவது ரெட் வெல்வெட் கேக். பார்ப்பதற்கு மிகவும் அழகாக, சுவையும் எதனுடனும் காம்ப்ரமைஸ் செய்ய முடியாத அளவுக்கு இருக்கும். ஆனால் இதை வீட்டிலேயே நாம் செய்து சாப்பிடலாம். பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கான செய்முறை என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்: 

மைதா மாவு - 2 கப்

பேக்கிங் சோடா - 1 ஸ்பூன் 

உப்பு - ½ ஸ்பூன் 

கோகோ பவுடர் - 2 ஸ்பூன் 

சர்க்கரை - 1½ கப்

வெண்ணெய் - ½ கப்

வெஜிடபிள் எண்ணெய் - 1 கப்

முட்டை - 2

பவுடர் சுகர் - 1 கப்

கிரீம் சீஸ் - 2 கப்

பட்டர் மில்க் - 1 கப்

வினிகர் - 1 ஸ்பூன் 

ரெட் ஃபுட் கலர் - 1 ஸ்பூன் 

வெண்ணிலா எசன்ஸ் - 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் கோகோ பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு கலந்து நன்றாக சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். 

பின்னர் தனியாக இன்னொரு பவுலில் சர்க்கரை, வெண்ணெய், சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். பின் அதிலேயே இரண்டு முட்டைகள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதிலேயே வெஜிடபிள் ஆயில், வினிகர் மற்றும் பட்டர் மில்க் சேர்த்து பீட்டரால் மிக்ஸ் செய்யவும். 

இவை நன்கு கலந்ததும், சலித்து வைத்துள்ள மாவினை அதில் சேர்த்து கலக்க வேண்டும். அடுத்து அதிலேயே ரெட் ஃபுட் கலர் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்க வேண்டும். 

பின்னர் இந்த கலவையை கேக் டின்னில் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் 175 செல்சியஸில் 30 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் அதை 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து கூல் செய்து கேக்கை வெளியே எடுங்கள்.

கேக் கிரீம் தயாரிக்கும் முறை: 

கேக் கிரீம் செய்வதற்கு முதலில் ஒரு பவுலில் பவுடர் சுகர் 1½  கப், கிரீம் சீஸ் 2 கப் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் 1 ஸ்பூன் சேர்த்து ஹேண்ட் பீட்டரில் நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும். பின்னர் தனியாக ஒரு பவுலில் ஹெவி கிரீம் 1 கப் அளவுக்கு எடுத்து ஹேண்ட் பீட்டரில் கலக்கவும். பிறகு முன்பு ரெடி செய்த சீஸ் க்ரீமை அதனுடன் சேர்ந்து கலந்தால் கேக்குக்கு கிரீம் ரெடி.

பிரிட்ஜில் குளிர வைத்த கேக்கை வெளியே எடுத்து அதன் ஓரங்களை நீக்கிவிடுங்கள். பின்னர் உங்களுக்குத் தேவையான அளவில் கேக்கை குறுக்குவாட்டில் இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மீதமுள்ள கேக் துண்டுகளை உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே செய்யலாம் ஈசியான டேஸ்டி கேக் ரெசிபிஸ்!
Red velvet cake recipe.

முதலில் கேக் துண்டை ஒரு தட்டில் வைத்து அதன் மேலே தயாரித்து வைத்துள்ள கிரீமை தடவும். பின்னர் அதன் மேலே இரண்டாவது லேயரை வைத்து மேலே மற்றும் சுற்றிலும் கிரீமை தடவுங்கள். இறுதியாக தனியாக எடுத்து வைத்துள்ள கேக் தூள்களை கேக்கில் ஓரத்தில் ஒட்டி வைக்கவும். பிறகு கேக்கின் மேல் பகுதியில் சிறு சிறு கேக் துண்டுகளை வெட்டி வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இறுதியில் அனைத்தையும் தயார் செய்த பிறகு கேக்கை அப்படியே எடுத்து பிரிட்ஜில் 3 மணி நேரம் வைக்கவும். 

அவ்வளவுதான், சூப்பரான ரெட் வெல்வெட் கேக் ரெடி. இதை ஒரு முறை முயற்சித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com