
நீங்கள் புழுங்கல் அரிசி சாதம் சாப்பிடுபவரா? மக்காச்சோளம், ஓட்ஸ் சாப்பிடும் பழக்கம் உண்டா? உங்களுக்கு ரத்த அழுத்த பிரச்னை வரவே வராது!, அமெரிக்கா மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ள மருத்துவ உண்மை இது.
தானிய வகை உணவுகளில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருத்துவகுணம் உள்ளது. அசைவ உணவுகள் சாப்பிடும் வழக்கம் இருந்தாலும் . ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது தானிய உணவை உண்டால் . ரத்த அழுத்த பாதிப்பு வராது.
புழுங்கல் அரிசி சாப்பிட்டு வருவோருக்கு அதில் உள்ள மருத்துவ குணம் உடல் நலனுக்கு மிகவும் நல்லது.இது போலவே கோதுமை, மக்காச்சோளம், ஓட்ஸ் போன்ற தானிய உணவை எடுத்துக் கொண்டாலும் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கப்படுகின்றன.
தானிய உணவுகளில் சத்துக்கள் மிக அதிகம்.இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை தரக்கூடிய ஆன்டிஆக்ஸிடென்டுகளும் உள்ளது. அதே வேளையில் புரோட்டீன் சத்தும் உள்ளது. தினமும் மூன்று வேளையும் தானிய உணவுகளை சாப்பிட்டு வருவோருக்கு இதனால் அதிக பலன் கிடைக்கிறது. மூன்று வேளையும் முழு தானிய உணவுகளை சாப்பிடுவோருக்கு மொத்தத்தில் 7 சதவீதம் மரண ஆபத்து குறைகிறது என்றும்.9 சதவீதம் இதயநோய் ஆபத்து குறைகிறது என்றும், 5 சதவீதம் கேன்சர் ஆபத்து குறையும் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
தூங்கச் செல்லும் ஒருமணி நேரத்திற்கு முன் புழுங்கல் அரிசி சாதத்தை சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். காரணம் இதிலுள்ள அதிகப்படியான கார்போஹைடிரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து தூக்கம் வரவழைக்க உதவுகிறது என்கிறார்கள். ஆனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒத்து வராது.
அரிசி கழுவிய நீரில் கூட பயன்கள் உண்டு. அரிசி நீர் என்பது சருமத்தில் உள்ள அழுக்கு, எண்ணெய் அகற்றும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இயற்கையாகவே இந்த நீரில் மாவுச்சத்து உள்ளது. அழுக்குக்களை அகற்றி முகத்தை பளபளப்பாக மாற்றும். அரிசி நீரில் உள்ள அமிலத்தன்மை இறந்த சரும செல்களை மெதுவாக வெளியேற்றும். இந்த செயல்முறை தோல் அமைப்பை மேம்படுத்தி செல் உருவாக்கத்தை ஊக்கப்படுத்தும்.
சாதம் சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் மதியம். ஏனென்றால், உங்கள் உடலுக்கு தினசரி செயல்பாடுகளை மேற்கொள்ள இந்த நேரத்தில் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. நீங்கள் விரும்பினால் காலை உணவிற்கும் சாதம் சாப்பிடலாம். இரவில் அதைத் தவிர்ப்பது நல்லது. காலையிலோ அல்லது மதியமோ அரிசி சாப்பிடுவது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
அரிசியை தண்ணீரில் ஊறவைத்து சமைப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும் ஒரு சிலர் அரிசியை சுமார் 3-4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைப்பார்கள். ஆனால் இப்படி செய்வதன் மூலம் அரிசியிலுள்ள வைட்டமின் மற்றும் மினரல்ஸ் தண்ணீரில் கரைந்துவிடுகின்றன.
அரிசியை சமைக்கும் முன்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைப்பதால் நொதி முறிவு ஏற்படுகிறது. இது நிகழ்வதன் மூலம் அரிசியில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் எளிய சர்க்கரைகளாக உடைக்கப்படுகின்றன. இதன் காரணமாக நமது உடல் இந்த சத்துக்களை எளிதில் கிரகித்துக் கொள்கின்றன.
இது அரிசியின் GI லெவலை குறைக்கிறது. ஒரு உணவின் GI லெவல் குறைவாக இருக்கும்போது, அதனை எடுத்துக்கொள்ளும் நபரின் ரத்த சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரிசியை அதிக நேரம் ஊறவைக்க வேண்டாம், சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கலாம். அதேபோல தண்ணீரில் நன்கு கழுவி சமைக்கலாம். இது அரிசியின் அமைப்பை சரியாக வைத்திருக்கும்.