ரெஸ்டாரண்ட் சுவையில் Mac and Cheese recipe இனி வீட்டிலேயே செய்யலாம்! 

Mac and Cheese recipe.
Mac and Cheese recipe.
Published on

Mac and Cheese உணவானது உலகெங்கிலும் பெரும்பாலான மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு பிரதான உணவாக இருக்கிறது. அதன் கிரீமி ச்சீஸி ஃபிளேவருக்கு தனிப்பட்ட ரசிகர் கூட்டமே உள்ளது எனலாம். இதை இந்தியாவில் பல இந்திய மசாலாக்களை சேர்த்து சாப்பிடும்போது வேற லெவல் சுவையில் இருக்கும். பெரும்பாலும் உணவகங்களில் கிடைக்கும் Mac & Cheese-ஐ வீட்டில் எப்படி செய்வது எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

மக்ரோனி - ¼ கிலோ 

நெய் - 2 ஸ்பூன் 

வெங்காயம் - 1 

பூண்டு - 2 பல்

இஞ்சி - சிறிய துண்டு

சீரகம் - ½ ஸ்பூன் 

மல்லித்தூள் - 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் 

மிளகாய் தூள் - ¼ ஸ்பூன் 

தக்காளி - 1 

பால் - 1 கப்

சீஸ் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

செய்முறை:

முதலில் மக்ரோனியை அதன் பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பெரிய கடாயில் நெய் சேர்த்து சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய பூண்டு, துருவிய இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

அடுத்ததாக எல்லா மசாலா தூளையும் அதில் சேர்த்து கிளறி, இஞ்சி பூண்டு வெங்காயம் என அனைத்தும் நன்கு வேகும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வேகும் வரை சமைக்கவும். பின்னர் தீயை குறைத்துவிட்டு அதில் பாலை ஊற்றி கிளறி சில நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். 

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் ஏன் அவசியம் நெய் சாப்பிட வேண்டும் தெரியுமா?
Mac and Cheese recipe.

பின்னர் நறுக்கி வைத்துள்ள சீஸை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அது உருகி கிரீம் போல மாறும் வரை கிளற வேண்டும். இப்போது உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். சீஸ் நன்றாக உருகியதும் மக்ரோனியை அதில் சேர்த்து கலக்கவும். மக்ரோனியில் சீஸ் எல்லா இடத்திலும் படரும் படி கிளறிவிடுங்கள். 

இறுதியில் அனைத்தும் நன்றாக செட் ஆனதும் அடுப்பை நிறுத்தி கொத்தமல்லித் தழையை மேலே தூவி இறக்கினால், ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் Mac and Cheese Recipe வீட்டிலேயே தயார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com