Rose Basundi எளிதான செய்முறை... சூப்பர் டேஸ்ட்!

Basundi
Rose Basundi Recipe!
Published on

இந்தியாவின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று ரோஜா பாசந்தி. பால், சர்க்கரை மற்றும் ரோஜா எசன் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு, அதன் தனித்துவமான சுவை மற்றும் மணத்திற்காக பிரபலமானது. குறிப்பாக, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பிரபலமான இந்த இனிப்பு, திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. இந்தப் பதிவில் ரோஜா பாசந்தியை எப்படி வீட்டிலேயே எளிதாக செய்வது? எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • 1 லிட்டர் பால்

  • 200 கிராம் சர்க்கரை

  • 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள்

  • 1/4 தேக்கரண்டி ஜாதிக்காய் தூள்

  • 2 தேக்கரண்டி ரோஜா எசன்ஸ்

  • 20 பாதாம், பொடியாக நறுக்கியது

  • 20 பிஸ்தா, பொடியாக நறுக்கியது

செய்முறை:

ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும். பால் நன்றாக கொதிக்கும்போது தீயைக் குறைத்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். பால் பாதியாக குறைந்து திடமான பதத்திற்கு மாறும் வரை, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கிளறிக் கொண்டே இருங்கள். 

பால் அதன் அளவிலிருந்து பாதியாக குறைந்ததும், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின்னர், ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள் மற்றும் ரோஜா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்றாகக் கலக்குங்கள். பாஸந்தி மேலும் கெட்டியாகும் வரை சுமார் 20 நிமிடங்கள் அப்படியே மிதமான சூட்டில் கொதிக்க விடவும். 

பாஸந்தி போதிய அளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். பின்னர், நறுக்கிய பாதாம் பிஸ்தா போன்றவற்றை அதன் மேலே தூவி அலங்கரித்து, ஃப்ரிட்ஜில் சுமார் அரை மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். 

இதையும் படியுங்கள்:
நீங்கள் பால் மற்றும் பால் பொருட்களை அதிகம் உண்பவரா? அச்சச்சோ ஜாக்கிரதை!
Basundi

இறுதியில் பிரிட்ஜில் இருந்து எடுத்து குளிர்ச்சியாக பரிமாறினால் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் அனைத்தையும் சாப்பிட்டு விடுவார்கள். அந்த அளவுக்கு இதன் சுவையும் மணமும் வேற லெவலில் இருக்கும். பாஸந்தி சுவையாக இருக்க உலர் திராட்சை, முந்திரி அல்லது பாதாம் பருப்புகளை சேர்க்கலாம். ரோஜா எசன்ஸ் பயன்படுத்த விருப்பம் இல்லையென்றால், ஒரு ஸ்பூன் ரோஜா பொடியை சேர்த்துக் கொள்ளலாம். 

பாசந்தி 2-3 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். இந்த அற்புதமான ரெசிபியை இன்றே முயற்சித்துப் உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com