பாத்திரங்கள் கழுவும் முன் பத்திரம்! இந்த 13 டிப்ஸ் உங்களுக்குப் பெரிதும் உதவும்!

Before washing...
Before washing...

-தா சரவணா

மைப்பதைவிட பாத்திரம் தேய்ப்பதுத்தான் மிகவும் கடினம். அதிலும் நிறைய பாத்திரங்கள் சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான். சமைத்த பாத்திரங்களைச் சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் தெரிந்தாலும், அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதில்தான் இருக்கிறது சவால்! அந்தச் சவாலை எதிர்கொள்ள பயனுள்ள டிப்ஸ் பகிர்கிறது இப்பதிவு!

1) சமைக்கும்போதே முடிந்தவரை பாத்திரங்களைத் துலக்கி வைத்து விடுங்கள். உதாரணமாக, புளி கரைத்த கிண்ணத்தை அப்படியே சிங்கில் போடாமல் ரசம் கொதிக்கும்போதே கழுவி வைத்துவிடுங்கள். சமைத்து முடித்து வெளியே வரும்போது, சிங்கில் எந்தப் பாத்திரமும் இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது பெரிய அளவில் பயனளிக்கும்.

2) பால் காய்ச்சிய பாத்திரம் போன்றவற்றை சிறிது தண்ணீர் ஊற்றிவைத்தால், துலக்கும்போது அதிகம் தேய்க்க வேண்டியதில்லை.

3) முடிந்தால் தேநீர் பைகள் பயன்படுத்துங்கள். தேநீர் கொதிக்க வைத்த பாத்திரம் துலக்குவதுதான் எரிச்சல். அதேபோல காபி, டீ குடித்தவுடன் தம்ளர்களை உடனடியாக கழுவிவைப்பது சாலச் சிறந்தது.

4) சாப்பிட்டு கை கழுவும்போதே தட்டையும் கழுவிவிடுங்கள். இந்த உத்தி சிறப்பான பலனளிக்கும் ஒன்றாகும்.

5) பாத்திரம் துலக்கும்போது, பெரிய பாத்திரத்தில் இருந்து தொடங்குங்கள். விரைவில் சிங்க் காலியவதால் பெரிய சுமையாகத் தெரியாது.

6) அமாவாசை மற்றும் சிறப்பு நாட்களில் இலை வாங்கும்போது, சிறிய வாழை இலை தடுக்குகள் அதே கடையில் வாங்கி வைத்துகொள்ளுங்கள். மாலை சிற்றுண்டியை தட்டின்மீது இலை வைத்து பரிமாறுங்கள்.

7) கண்ணாடி, பீங்கான் பொருட்களை உபயோகியுங்கள்.

8) விளிம்புகள் தட்டையாக உள்ள பாத்திரங்கள், தம்ளர்கள் பயன்படுத்துங்கள். விளிம்புகள் மடித்து இருப்பதைவிட இவை துலக்குதல் எளிது.

9) இன்று பெரும்பாலான வீடுகளில் குக்கரைத் தவிர்த்து பாத்திரங்களில் சாதம் சமைக்கத் தொடங்கியுள்ளனர். இது நல்ல விஷயம். ஆனால், பாத்திரத்தை சிங்கில் போடும்போது சாதம் சமைத்த பாத்திரத்தில் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் அதைக் கழுவுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். இல்லையென்றால் காய்ந்த சோற்று பருக்கைகள் விரல்களில்பட்டு கிழிப்பதற்குக்கூட அதிக வாய்ப்புண்டு.

10) சாப்பிட்டு முடித்ததும் வீணாகும் காய்கறி, தோல்கள் ஆகியவற்றைச் சிங்கில் போடுவதற்கு முன்பு குப்பைத் தொட்டியில் போடவேண்டும். இல்லையென்றால் இந்த வீணானப் பொருட்கள் சிங்கிள் இருந்து கழிவுநீர் வெளியேறுவதற்குத் தடையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அன்பெனும் நீர் ஊற்ற மகிழ்ச்சியும் வெற்றியும் தேடி வரும்!
Before washing...

11) அசைவ உணவுகள் சமைக்கும் பாத்திரங்களை ஒன்றுக்கு இரண்டு முறை கழுவுவது நல்லது. அப்போதுதான் அசைவ வாடை அந்தப் பாத்திரத்திலிருந்து போகும்.

12) 90 சதவீத வீடுகளில் அடுப்படியில்தான் சிங்க் அமைக்கப்பட்டிருக்கும். அதனால் அதை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது அனைவருக்கும் நல்லது. சிறிது சுத்தம் இல்லை என்றாலும் அதிலிருந்து வரும் நாற்றம், சமையல் தரத்தையே குறைத்துவிடும்.

13) வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால்கூட கிச்சனுக்குள் வந்து அவர்கள் முதலில் பார்க்க விரும்புவது சிங்க் ஆகத்தான் இருக்கும். அதனால் அதை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com