motivation image
motivation imageImage credit - pixabay.com

அன்பெனும் நீர் ஊற்ற மகிழ்ச்சியும் வெற்றியும் தேடி வரும்!

Published on

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அன்பு பாசம் காட்டும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து தான் வருகிறது. இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம் நேரம் இன்மை என்று சொல்வோம் ஆனால் அது இல்லை நம் மனநிலை என்று சொல்லலாம்.

மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டுவது குறைந்து, மனிதனை மனிதனே அழித்து வாழும் சமுதாயமாக நம் மனித இனம் மாறிக் கொண்டு இருக்கிறது.

பணம், புகழ், போதை, மண் மீது மோகம் கொண்ட சமுதாயமாக மாறிக்கொண்டு போகிறது நம் சமுதாயம். நிலையில்லாதவற்றின் மீது கொண்ட மோகம் ஏன் நிலையான அன்பின் மீது வைக்க நம்மால் முடியவில்லை.?

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சாதிச்சண்டை மதச்சண்டை, அரசியல் சண்டை இவற்றை இல்லாமல் நம்மால் இருக்க முடியாதா?

அண்ணல் காந்தி பிறந்த மண்ணில் அகிம்சை இன்று இல்லை. அன்னை தெரசா வாழ்ந்த இந்த மண்ணில் இன்று இரக்கம் அழிந்து வருகிறது. புத்தன் பிறந்த மண்ணில் இன்று அன்பு குறைந்து வருகிறது.

அடிபட்டு கிடக்கும் ஒருவனை வேடிக்கை பார்க்கிறோமே தவிர அவனைக் காப்பாற்ற யாரும் முயற்சி எடுப்பதில்லை.

நம்மிடம் தோன்றும் பாசமும், அன்பும், இரக்க குணமும் இன்று தேய்ந்து கரைந்து கொண்டு இருக்கிறது.

நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுவதை விடுத்து மண்ணுக்காகவும், பொருளுக்காகவும், சண்டை இடுகிறோம். அரசியல் நடத்த மதத்தைக் காரணம் கூறியும், சாதியை காரணம் கூறியும் சண்டை இட்டுக் கொள்கிறோம்.

பணத்திற்காக, மதத்திற்காக, சாதிக்காகவா? வாழ்கிறோம் என்றே தெரியாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இதையெல்லாம் விட, அன்பிற்காக வாழ மறந்து விட்டோம். நம்மிடம் தோன்றும் பாசமும், அன்பும், இரக்க குணமும் இன்று தேய்ந்து கரைந்து கொண்டு இருக்கிறது. குழந்தைகளிடம் கூட அன்பிற்கான அர்த்தம் மறைந்து போகும் நிலையை நாம் உருவாக்கி விட்டோம்.

இதையும் படியுங்கள்:
லேடீஸ் விரும்பும் லேட்டஸ்ட் ஃபாஷன் – லெக்கிங்ஸ் இந்த 10 வகைகள் மிகப் பிரபலம்!
motivation image

அது நீடித்தால் அன்பு என்ற வார்த்தை மறந்துபோய் எதிர்காலத்தில் அதனை ஏட்டில் படிக்கும் நிலைமை உருவாகக் கூடும் எனவே, மனிதநேயம் வளர, அன்பெனும் நீர் ஊற்ற நாம் முயல வேண்டும்.

அன்பு காட்டுங்கள். அடுத்தவரிடம் அன்பாயிருப்பது உண்மையில் உங்களுக்கே நன்மை பயக்கும். உங்களை உயர் நிலைக்கு எடுத்துக் கொண்டுபோய் சேர்க்கும்.

விருப்பு வெறுப்புகளை தவிர்த்து அனைவரிடமும் அன்பாக இருந்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் தேடிச்செல்ல வேண்டாம் அவைகள் உங்களைத் தேடிவரும்.

logo
Kalki Online
kalkionline.com