சைவ ஈரல் குழம்பு செய்யலாம் வாங்க!

Saiva Eral Kuzhambu
Saiva Eral Kuzhambu
Published on

தேவையான பொருட்கள்:

பச்சை பயிறு - 2 கப்

நறுக்கிய வெங்காயம் - 1 கப்

நறுக்கிய தக்காளி - 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

மிளகு - 2 தேக்கரண்டி

சீரகம் - 2 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 2 

பிரிஞ்சி இலை - 1

அன்னாசி பூ - 1

நல்லெண்ணெய் - 1/2 மேஜை கரண்டி

புதினா, மல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சைப் பயிறை 5 மணி நேரம் நன்கு ஊறவைத்து, பிறகு அதனுடன் மிளகு, சீரகம் தலா ஒரு தேக்கரண்டி அளவில் சேர்த்து கூடுதலாக பச்சை மிளகாய் ஒன்றையும் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்படும் போது தண்ணீர் சிறிது தெளித்து அரைக்கவும். அரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். வெந்த பின் அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

ஒரு கணமான வாணலில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் சோம்பு ஒரு தேக்கரண்டி, பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, அன்னாச்சி பூ எல்லாம் சேர்த்து மிதமான சூட்டில் தாளித்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சிறிது கருவேப்பிலை, பச்சை மிளகாய் கீறியது 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு  இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நாவூர வைக்கும் காஞ்சிபுரம் சுண்டல்-பொரிச்ச கிழங்கு கறி செய்யலாம் வாங்க!
Saiva Eral Kuzhambu

தக்காளி வதங்கியதும் அதனுடன் வேகவைத்து நறுக்கிய பாசிப்பயிறு கலவை துண்டுகளை கடாயில் சேர்த்துக் கிளறி விடவும். இப்போது மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 2 தேக்கரண்டி, கரம் மசாலா, மல்லித்தூள் தலா ஒரு தேக்கரண்டி சிறிது உப்பையும் சேர்த்து கிளறி விடவும். மசாலா பச்சைபயிர் தூண்டுகளோடு சேர்ந்ததும் அரை கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும். 2 நிமிடம் கழித்து அதில் மிளகுத்தூள், சீரகத் தூள் ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய புதினா, மல்லித் தழைகளை தூவி இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.

இப்போது தயாரான சைவ ஈரல் குழம்பை சாதம், இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பரோட்டா வரை அனைத்திற்கும் சேர்த்துக் கொள்ள பொருத்தமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com