
முந்திரி கேக்
செய்யத் தேவையான பொருட்கள்:
முந்திரிப் பருப்பு - ஒரு கப்
சர்க்கரை -ஒரு கப்
நெய்- அரை கப்
திக்கான பால் -ஒன்னரை கப்
ஏலக்காய் பொடி -மூன்று சிட்டிகை
செய்முறை:
பாலில் முந்திரிப்பருப்பை 11/2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த முந்திரியை சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பின்னர் அடிகனமான உருளியில் கொட்டி சிறு தீயில் வைத்து கிளற ஆரம்பிக்கவும். தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு கைவிடாமல் கிளறி, நல்ல கெட்டி பதம் வரும்போது ஏலப் பவுடர் சேர்த்து நெய் தடவிய பெரிய தாம்பாளத்தில் கொட்டி கலவையை நன்றாக பரப்பி விட்டு ஆறவிடவும்.
நன்கு ஆறிய பிறகு விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டு எடுத்து வைக்கவும். முந்திரி கேக் ரெடி. முந்திரிப்பருப்பை பார்த்த மாத்திரத்திலேயே அதிகமாக எடுத்து சாப்பிடுவோம். அதில் எந்த விதமான பலகாரம் செய்தாலும் சும்மா விடுவோமா என்ன? ம்...எடுத்து சாப்பிடுங்க!
வெஜ் கொத்து பரோட்டா
மெலிதாக நறுக்கிய கேப்சிகம், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி எல்லாமாக சேர்ந்தது- ஒன்னரை கப்
அரை கப் மைதா மாவு அரை கப் கோதுமை மாவு இரண்டையும் சேர்த்து செய்த பரோட்டா -இரண்டு
நீளமாக அரிந்த பெரிய வெங்காயம்- ஒன்று
தோல் நீக்கிய தக்காளி துண்டுகள்- மூணு டேபிள் ஸ்பூன்
உப்பு , எண்ணெய் -தேவையான அளவு
மிளகாய் பொடி- அரை டீஸ்பூன்
விருப்பப்பட்ட சாஸ் -ஒரு டீஸ்பூன்
செய்முறை:
பரோட்டாக்களை சிறு சிறு துண்டுகளாக ஒரே சைஸில் கட் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
மீந்த அந்த எண்ணெய் கடாயில் வெங்காயம், தக்காளி மற்றும் காய்கறிகளை சேர்த்து உப்பு, மிளகாய் பொடி சேர்த்து வதக்கி அதனுடன் பொரித்த பரோட்டா துண்டுகளை சேர்த்து சிறிதளவு விருப்பப்பட்ட சாஸ் சேர்த்து கிளறி இறக்கவும். சூடாக சாப்பிட ருசியாக இருக்கும். விக்காமலும் இருக்கும்.