
கேசரி இட்லி என்பது ஒரு வித்தியாசமான இனிப்பு உணவாகும். இது கேசரியின் இனிப்பும், இட்லியின் மென்மையும் கலந்து கிடைக்கும் ஒரு சுவையான உருமாற்றம். இதை செய்ய...
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – 2 கப்
உப்பு – சிறிது
ரவை – ½ கப்
சர்க்கரை – ¾ கப் (விருப்பப்படி அதிகமோ குறையோ)
நெய் – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய்தூள் – ¼ டீஸ்பூன்
கேசரி கலர் பொடி– ஒரு சிட்டிகை
பாசிப்பருப்பு – 1 மேசைக் கரண்டி
பன்னீர் துண்டுகள் _ சில
முந்திரி, திராட்சை – சில (வறுத்தது)
செய்முறை: ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரியும் திராட்சையையும் வறுக்கவும். அதில் ரவை சேர்த்து, தங்க நிறம் வரும் வரை வறுக்கவும். ஒரு கப் வெந்நீர் ஊற்றி கிளறவும். வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். கலரிங், ஏலக்காய்தூள் சேர்த்து கிளறவும் பாசிப்பருப்பு, பன்னீர் சேர்க்கலாம்.கொஞ்சம் கெட்டியாகும் வரை வேகவைத்து, ஆறவைக்கவும்.
இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி, 1 மேசைக்கரண்டி இட்லி மாவை ஊற்றி, மேலே 1 மேசைக்கரண்டி கேசரி ஊற்றவும். அதன் மேலே மீண்டும் சிறிது இட்லி மாவை ஊற்றி மூடிவிடவும். எல்லா குளிகளிலும் இதேபோல் செய்யவும்.
இட்லி தட்டுக்களை இட்லி குக்கரில் வைத்து, 10–12 நிமிடம் வேகவைக்கவும். ஆறியதும் மெதுவாக எடுத்து பரிமாறவும். நெய்யோடு சுடச்சுட பரிமாறலாம். தொட்டுக்க தேங்காய் சட்னி கொடுக்கலாம்.
அவகேடோ சாண்ட்விச் (Avocado Sandwich)
இது ஆரோக்கியம் நிறைந்த, சத்தான மற்றும் சுலபமான சிற்றுண்டி வகையாகும். அவகாடோவில் உள்ள நல்ல கொழுப்புச்சத்துகள் இதய நலனுக்கு உகந்தவை. காலை உணவாகவும், மாலையுணவாகவும் மிகச்சிறந்த தேர்வாகும்.
தேவையான பொருட்கள்
அவகாடோ – 1 (பழுத்தது)
wheat bread– 4 துண்டுகள்
வெங்காயம் – ½ (நறுக்கியது)
தக்காளி – 1 (வட்டமாக நறுக்கியது)
முட்டை – 1 (வறுத்தது)
பச்சைமிளகாய் – 1 (நறுக்கியது)
எலுமிச்சைசாறு – 1 டீஸ்பூன்
உப்பு – சிட்டிகை
மிளகுதூள் – ¼ டீஸ்பூன்
வெண்ணெய்_ சிறிது (தோசைக்கல்லில் சுட)
செய்முறை: பழுத்த அவகேடோவை நடுவாக இரண்டாக வெட்டி, உருளை அகற்றி உள்ளே உள்ளதை ஸ்பூனால் எடுத்துக்கொள்ளவும். ஒரு பௌலில் அவகாடோவை நன்றாக மசிக்கவும். அதில் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கிளறவும்.
Bread துண்டுகளை எடுத்து, ஒன்று மீது அவகாடோ கலவையை தடவவும். மேலே தக்காளி வட்டம், வறுத்த முட்டையை வைத்து மூடி bread துண்டை மேலே வைக்கவும். இரண்டு பக்கங்களிலும் சிறிது வெண்ணெய் தடவி, தோசைக்கல்லில் அல்லது பான்-இல் இரு பக்கமும் பொன்னிறமாக வேகவைக்கவும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் உணவாகவும் பயன்படுத்தலாம்.
ஒரு பசு தயிர் அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறலாம். சாலட் அல்லது சூப்போடு சேர்த்து ஹெல்த்தி லஞ்ச் ஆகவும் உபயோகிக்கலாம். அவகேடோ பழுத்ததாக இருக்கவேண்டும்.