
பால் பணியாரம்
தேவை:
பச்சரிசி – 1 கப், உளுத்தம்பருப்பு – அரை கப், பசும்பால் – 2 கப்,
தேங்காய் பால் – அரை கப்
சர்க்கரை – 1 கப்,
ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
பச்சரிசி உளுந்தம் பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, கெட்டியாக அரைக்கவும். மாவை கோலி குண்டு அளவுகளில் உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பசும்பாலை காய்ச்சி இறக்கி, தேங்காய் பால், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து, பொரித்த உருண்டைகளை பாலில் ஊறப்போட்டு எடுக்கவும். சுவையான, சத்தான செட்டிநாட்டு பால் பணியாரம் ரெடி.
கந்தரப்பம்
தேவை:
பச்சரிசி - 1 கப்,
வெந்தயம் - 1 ஸ்பூன்
புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப்,
நறுக்கிய வெங்காயம் - 2, தாளிக்க - கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஒன்று
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு, வெந்தயம் இவற்றை நீரில் ஊறவைத்து, நீரை முழுவதும் வடித்துவிட்டு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் காய்ந்த எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, மாவில் சேர்க்கவும். மாவை போண்டா போல உருட்டி, காய்ந்த எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான கந்தரப்பம் தயார்.
மக்காச் சோள ஊத்தப்பம், ட்ரை ஃபரூட்ஸ் அப்பம்
மக்காச் சோள ஊத்தப்பம்
தேவை:
இட்லி அரிசி – 4 கப், உளுத்தம்பருப்பு – ஒரு கப், வெந்தயம் – 2 ஸ்பூன்,
மக்காச் சோளம் – 2,
எண்ணெய் – 100 மில்லி,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் மூன்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து அரைக்கவும். மக்காச் சோளத்தை உரித்து முத்துக்களை எடுத்து, தனியாக அரைத்து, மாவுடன் கலந்து, உப்பு சேர்க்கவும். தோசைக்கல்லில் மாவை உற்றி ஊத்தப்பமாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும். சுவையான மக்காச் சோள ஊத்தப்பம் தயார்.
டிரைஃப்ரூட்ஸ் அப்பம்
தேவை:
முந்திரி, பாதாம், பிஸ்தா அரைத்த விழுது - அரை கப், மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பேரீச்சம்பழம் - 4,
ஏலக்காய் - 4,
பொடித்த வெல்லம் - அரை கப்,
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு கிண்ணத்தில் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை அரைத்த விழுது, மைதா மாவு, கோதுமை மாவு, ஏலக்காய் பொடி, பேரீச்சை துண்டுகள், தேங்காய்துருவல் ஆகிய எல்லாவற்றையும் சேர்க்கவும். வெல்லத்தூளில் சிறிது நீர்விட்டு, கரைத்து வடிகட்டிக் கொதிக்க வைக்கவும். அந்த வெல்லத் தண்ணீரையும் மேற்சொன்ன கலவையில் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அப்பங்களாக வார்த்து எடுக்கவும். சுவையான, சத்தான டிரைஃப்ரூட்ஸ் அப்பம தயார்.