டேஸ்டியான வள்ளிக்கிழங்கு பன்னீர் பராத்தா!

வள்ளிக்கிழங்கு பன்னீர் பராத்தா ...
வள்ளிக்கிழங்கு பன்னீர் பராத்தா ...

ந்த வள்ளிக்கிழங்கு பன்னீர் பராத்தா சத்துமிக்க உணவாகவும், அனைவரும் விரும்பி சாப்பிட ஏதுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒருமுறை செய்து பாருங்கள்.

தேவை: சர்க்கரை வள்ளிக்கிழங்கு (வேக வைத்து மசித்தது)  - 1 கப். பன்னீர் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், சீரகப் பொடி, கரம் மசாலா, சாட் மசாலா,  ஆம்சூர் (மாங்காய் பொடி ) பெருங்காயப் பொடி – தலா 1 டீ ஸ்பூன், மிளகாய் பொடி - 1 ½ டீ ஸ்பூன் ,ஓமம் – 1 ஸ்பூன் , கோதுமை மாவு – 1 கப், நெய்- 1 ஸ்பூன், கசூரி மேத்தி (காய்ந்த வெந்தய இலை) , கொத்தமல்லி- சிறிது, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் நெய், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும பெருங்காயப் பொடி, ஓமம் போட்டு பின் வள்ளிக் கிழங்கை சேர்த்து வதக்கவும். பொடிகள் எல்லா வற்றையும போட்டு கடைசியாக பன்னீர் துருவல், உப்பு, மல்லித்தழை, கசூரி மேத்தி  சேர்த்து நன்கு கலந்து  சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க ஐஐடி சென்னை - மேஸ்ட்ரோ இளையராஜா ஒப்பந்தம்!
வள்ளிக்கிழங்கு பன்னீர் பராத்தா ...

ஒரு உருண்டை சப்பாத்தி மாவை எடுத்து சிறு கிண்ணம் போல் செய்து அதில் வள்ளிக்கிழங்கு பன்னீர் மசாவா வைத்து சிறிது கனமான சப்பாத்திகளாக தேய்த்து சூடான தவாவில் போட்டு  எண்ணெய் அல்லது நெய் விட்டு இரு புறமும் நன்றாக  சிவந்தவுடன் எடுக்கவும்.  கிழங்குடன் சோயா பன்னீர் சேர்த்தும் பராத்தா செய்யலாம். இந்த பராத்தவுடன் வெண்ணெய், தயிர், ஊறுகாய் சேர்த்தும் சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com