
பஞ்சாபி மிஸ்ஸி ரொட்டி ரெசிபி.
தேவையான பொருட்கள்:
1.முழு கோதுமை மாவு 1 கப்
2.கடலை மாவு ¾ கப்
3.மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
4.மிளகுத் தூள் ½ டீஸ்பூன்
5.ஓமம் ½ டீஸ்பூன்
6.ஆம்சூர் பவுடர் ½ டீஸ்பூன்
7.பெருங்காயம் 1 சிட்டிகை
8.கசூரி மேத்தி 1 டீஸ்பூன்
9.இஞ்சி பூண்டு பேஸ்ட் ½ டீஸ்பூன்
10.பச்சை மிளகாய் 1(நறுக்கியது)
11.வெங்காயம் ½ (நறுக்கியது)
12. கொத்தமல்லி இலை 2 டேபிள் ஸ்பூன்
13.எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
14.தண்ணீர் தேவையான அளவு
15.உப்பு தேவையான அளவு
16.நெய் தேவையான அளவு
செய்முறை:
நெய் தவிர, மேலே கொடுத்துள்ள அனைத்துப் பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சப்பாத்திமாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து மாவை பிய்த்தெடுத்து சிறு சிறு உருண்டைகளாக்கி ரொட்டியாய் தேய்த்துக்கொள்ளவும். தேய்த்த ரொட்டிகளை சூடான தவ்வாவில் போட்டு இரண்டு பக்கமும் வெந்து வருமாறு சுட்டெடுக்கவும். அதில் நெய் தடவி, பிடித்தமான சப்ஜியுடன் பரிமாறவும்.
கச்சா கேலா டிக்கி ரெசிபி.
தேவையான பொருட்கள்:
1.வாழைக்காய் 2
2.நறுக்கிய பச்சை மிளகாய் 2
3.நறுக்கிய வெங்காயம் 1
4.கரம் மசாலா பவுடர் ½ டீஸ்பூன்
5.கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன்
6.மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
7.சீரகம் 1 டீஸ்பூன்
8.சிவப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
9.ரவை 1டேபிள் ஸ்பூன்
10.இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
11.கொத்தமல்லி இலை 2 டேபிள் ஸ்பூன்
12.உப்பு தேவையான அளவு
13.எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து எண்ணெய் சூடானதும் வெங்காயத்தைப் போடவும். கூடவே பச்சை மிளகாய்,
கரம் மசாலா பவுடர், மிளகாய் தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். ஒரு பாத்திரத்தில் வாழைக்காய்
துண்டுகளைப் போட்டு மசிக்கவும். அதனுடன் கடலை மாவு, மல்லி இலைகள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். பின் வதக்கிய வெங்காய கலவையையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அதிலிருந்து வட்ட வட்டமான கட்லட்களை செய்து அதை ரவையில் புரட்டி எடுத்து, எண்ணெயில் பொரித் தெடுக்கவும். கச்சா கேலா டிக்கிகள் தயார்.