
மெல்லிய நைலான் சேமியாவை உபயோகித்து எனது குஜராத்தி சிநேகிதி செய்திருந்த டெஸர்ட் செம டேஸ்ட்டியாக இருக்கவும், அதன் ரெசிபியைக் கேட்டேன். இதற்கு மில்க் பவுடர் மற்றும் கன்டென்ஸ்டு மில்க் தேவையில்லை என்றவள், ரெசிபியை கூறினாள்.
தேவை:
* மெல்லிய நைலான் சேமியா 200 கிராம்
* நல்ல நெய் 1/4. கப்
* ஜீனி 1 கப்
* நல்ல ஃபுல் க்ரீம் மில்க் 1/2 லிட்டர்
* நல்ல பால் 1/4 கப்
* கஸ்டர்ட் பவுடர் 2 டேபிள்ஸ்பூன்
* மிக்ஸ்ட் ட்ரை ஃப்ரூட்ஸ் 1/4 கப்
செய்முறை:
முதலில், சேமியாவை ஒடித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு அடுப்பின் மீது வைத்து காய்ந்ததும், ஒடித்து வைத்திருக்கும் சேமியாவைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அடுப்பை அணைத்து, கீழே இறக்கி வைக்கவும்.
நல்ல பாலில், கஸ்டர்ட் பவுடரைப் போட்டு மிக்ஸ் செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
மற்றொரு அடிக்கனமான வாணலியை அடுப்பின் மீது வைத்து அதில், ஃபுல் க்ரீம் மில்க்கை விட்டு காய்ச்சவும். நன்றாக கொதிக்கையில், ஜீனியைப் போட்டு கலக்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும். இப்போது, கஸ்டர்ட் பவுடர் மிக்ஸ்ட் மில்க்கை இதில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிண்டவும். கெட்டியான பின் அடுப்பிலிருந்து கீழே இறக்கிவிடவும்.
அரை இன்ஞ் உயரமுடைய செவ்வக வடிவ ட்ரேயில், மூன்று பக்கங்களிலும் நெய் தடவி பொன்னிறமாக வறுத்த நைலான் சேமியாவில் பாதியை சமமாக பரப்பவும். இதன் மீது மிதமான சூட்டிலிருக்கும் கெட்டியான பாலை பரவலாக, திக்காக விடவும். பின்னர், மீதி சேமியாவை பாலின் மேல் சமமாக தூவி, ட்ரை ஃப்ரூட்ஸ்களைப் போட்டு, நன்கு அழுத்திவிடவும்.
சுமார் பத்து நிமிடங்கள் சென்ற பின், ட்ரேயை ஃப்ரிட்ஜிற்குள் ஒரு மணி நேரம் வைத்து வெளியே எடுத்து, மெதுவாக சதுர வடிவில் கட் செய்து வாயகன்ற ஃபௌலில் போட்டு, ஸ்பூனால் எடுத்து சாப்பிடுகையில், செம டேஸ்ட்டாக இருக்கும் இந்த புது மாதிரியான சேமியா டெஸர்ட்.