அசத்தலான கேரளா ஸ்டைல் பீட்ரூட் தோரன் மற்றும் வெஜிடபிள் ஸ்டூ (Stew) செய்யலாமா?

kerala style beetroot thoran - Stew...
Kerala special recipsImage credit - youtube.com
Published on

ழக்கமாக தத்தம் மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, இயற்கையாகவே அடுத்த மாநிலத்தவரின் உணவுகளையும் வேறுபட்ட சுவையில் செய்து உண்ண வேண்டும் என்ற தாகம் இருந்துகொண்டிருக்கும். அதற்காக, நம் அண்டை மாநிலமான கேரளாவில் மக்கள் அடிக்கடி சமைக்கும் பீட்ரூட் தோரன் மற்றும் வெஜிடபிள் ஸ்டூ செய்யும் முறையை இப்பதிவில் பார்க்கலாம்.

பீட்ரூட் தோரன்

தேவையான பொருட்கள்:

மீடியம் சைஸ் பீட்ரூட்  2 (துருவிக்கொள்ளவும்)

துருவிய தேங்காய் பூ  ½ கப் 

சின்ன வெங்காயம்  6

பச்சை மிளகாய்  2

கடுகு 1 டீஸ்பூன் 

சீரகம் ½ டீஸ்பூன் 

மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன் 

கறிவேப்பிலை & உப்பு  தேவையான அளவு 

செய்முறை:

தேங்காய் துருவல், ஜீரகம் மற்றும் மஞ்சள் தூளை மிக்ஸியில் போட்டு சிறிது கொர கொரப்பாக அரைத்தெடுக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய்யை ஊற்றவும். சூடானதும் கடுகு சேர்க்கவும். வெடித்ததும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் பீட்ரூட் துருவலை சேர்த்து 3 நிமிடங்கள் வரை கிளறிவிட்டு வதக்கவும். பின் அதில் அரைத்து வைத்த தேங்காய், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் விட்டு மிதமான தீயில் எட்டு நிமிடங்கள் வைத்து இறக்கவும். சுவையான பீட்ரூட் தோரன், ரைஸ் மற்றும் சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா தொட்டுக்க தயார்.

வெஜிடபிள் ஸ்டூ (Stew)

தேவையான பொருட்கள்:

லவங்கம்   2

பட்டை 1 துண்டு 

பிளாக் பெப்பர் கார்ன்  4

மீடியம் சைஸ் வெங்காயம்  1 (நறுக்கியது)

நறுக்கிய ½ இன்ச் சைஸ் இஞ்சி  1 துண்டு 

பச்சை மிளகாய் 2

உருளை கிழங்கு  1

கேரட்   1

நறுக்கிய பீன்ஸ் ½ கப் 

பச்சைப் பட்டாணி ½ கப்

நீர்த்த (thin) தேங்காய் பால் முக்கால் கப் 

கெட்டி (thick) தேங்காய் பால் ½ கப் 

கருப்பு மிளகுத் தூள் ½ டீஸ்பூன் 

கறிவேப்பிலை  2 இணுக்கு 

தண்ணீர் ½ கப்

உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:  

கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், பெப்பர் கார்ன் சேர்த்து வாசனை வரும்வரை வறுக்கவும். பின் ஒரு இணுக்கு கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். பிறகு வெங்காயம் சேர்த்து பொன் நிறம் வரும்வரை வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
பிரட் கார்ன் போண்டாவும் ஹெல்தி கார்ன் சூப்பும் செய்வோமா?
kerala style beetroot thoran - Stew...

அதனுடன் காரட், பீன்ஸ் சேர்த்து, தண்ணீர் மற்றும் நீர்த்த தேங்காய் பால் ஊற்றி மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும். 5 நிமிடம் கழித்து பட்டாணி மற்றும் தோல் சீவி நறுக்கிய உருளைக் கிழங்கு சேர்க்கவும். வெஜிடபிள்ஸ் வெந்ததும் கெட்டித் தேங்காய்பால் ஊற்றி மிதமான தீயில் வைக்கவும். பின் அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு கிண்டு கிண்டி, மேலும் இரண்டு நிமிடம் வைத்திருந்து கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு இறக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com