செம டேஸ்டில் கோதுமை மோர் களியும், தேங்காய்ப்பால் சாதமும்!

Healthy samayal recipes
தேங்காய்ப்பால் சாதம்!Image credit - youtube.com
Published on

ந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை களி என்றால் ஒரு சிறப்பு இருக்கவே செய்கிறது. சத்தான களி பெரும்பாலோர் வீடுகளில் காலை உணவாகவே இடம் பெறும். அதேபோல் இயற்கையின் அமுதமான தேங்காய் பால்  வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு சிறந்த மருந்தாக சமையலிலும் சேர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது அந்த வகையில் இந்த இரண்டு ரெசிபிகளையும் பார்ப்போம்.

கோதுமை மோர் களி

தேவை:

கோதுமை மாவு - 1கப்
புளித்த மோர் - 1கப்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
மோர் மிளகாய் - 4
உப்பு  - தேவைக்கு
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு, மோர் சேர்த்து நன்கு கலக்கவும். வாணயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு , கடலைப்பருப்பு, மோர் மிளகாய் ஆகியவற்றை தாளித்து அடுப்பை சிம்மில் வைத்து கரைத்து வைத்துள்ள மாவை அதில் ஊற்றி கை விடாமல் கிளறவும். சில நிமிடங்களில் கலவை ஒட்டாமல் வெந்து வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறலாம். களி கிண்டும் போது தீ குறைவாக இருக்க வேண்டும். அதேபோல் அடிப்பிடிக்க விடாமல் கிளறுவதும் முக்கியம். இதில் கோதுமைமாவுக்கு பதில் அரிசிமாவும் சேர்த்து செய்யலாம்.

தேங்காய்ப் பால் சாதம்

தேவை:

தேங்காய் பால் - இரண்டு கப்
பாஸ்மதி அரிசி அல்லது சீரகசம்பா அரிசி - இரண்டு கப்
கேரட் பீன்ஸ் (நறுக்கியது) - கால் கப்
பச்சைப் பட்டாணி (உரித்தது) -சிறிய கப்
பெரிய வெங்காயம் - இரண்டு உருளைக்கிழங்கு - ஒன்று
புதினா கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - ஆறு
பட்டை ,லவங்கம் ,ஏலக்காய் - தலா 2
சோம்பு- சிறிது
பிரிஞ்சி இலை -1
அன்னாசிப்பூ மராட்டி மொக்கு - தலா 1
கரம் மசாலா தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது-  1ஸ்பூன் எலுமிச்சை சாறு - தேவைக்கு
நெய் அல்லது எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
தமிழர்களின் பாரம்பரிய உணவுமுறை பற்றித் தெரியுமா?
Healthy samayal recipes

செய்முறை:

அரிசியைக் கழுவி வடித்து சிறிது நெய்யில் வறுத்து வைக்கவும். கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு வெங்காயம் ஆகியவற்றை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். பச்சைப் பட்டாணியை சுடுநீரில் அலசி வைக்கவும். கொத்தமல்லி தழை பொதினாவை கழுவி 3 பச்சை மிளகாய் சோம்புடன்  மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மீதமுள்ள 3 பச்சை மிளகாய் கீறி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, லங்கம், தட்டிய ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, மராட்டிமொக்கு ஆகியவற்றை தாளித்து வெங்காயத்தை வதக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு ,கரம் மசாலாத்தூள், அரைத்த கொத்தமல்லி விழுது, இஞ்சி பூண்டு விழுது ,சேர்த்து வதக்கவும்.  பிறகு கீறிய பச்சை மிளகாய் கேரட் பீன்ஸ் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி  தேவையான எலுமிச்சை சாறு உப்பு சேர்த்துக் கிளறி  தேங்காய்ப் பாலுடன்  ஒன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரிசியை சேர்த்து ஆவி வந்ததும் வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து எடுத்து மேலே கொஞ்சம் நெய் ஊற்றிக் கிளறி சுடச்சுட பரிமாறினால் சுவை அள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com