வாயில் நீரூற வைக்கும் வாழைக்காய் ரெசிபிகள்..!


Banana recipes
Banana recipesImage credit - youtube.com
Published on

வீட்டில் வாழைக்காய் இருந்தால் அதை வைத்து விதவிதமான ரெசிபிகளை செய்யலாம். பஜ்ஜி முதல் வறுவல் வரை சமையலில் வாழைக்காய் அனைவருக்கும் உதவும் செல்லப்பிள்ளை. நாமும் வாயில் நீரூற  வைக்கும் வகையில் இரண்டு வாழைக்காய் ரெசிபிகளை செய்து பார்க்கலாம் வாருங்கள்.

எண்ணெய் மிளகு வழைக்காய் கறி


தேவையானவை:

வாழைக்காய் மீடியம் சைஸ்-  இரண்டு  வரமிளகாய் -3
புளி-  நெல்லிக்காய் அளவு
உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு -தலா இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு -தேவையான அளவு
மிளகு - ஒரு டீஸ்பூன்
சோம்பு- அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - இரண்டு ஸ்பூன்

செய்முறை:

வாழைக்காயின் தோலை அதிகமாக எடுக்காமல் அப்படியே சதுரமாக நறுக்கி (கருக்காமல் இருக்க) நீரில் போடவும்.. வெறும் வாணலியில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனியே வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் பொடிக்கவும். அதேபோல் சூடான வாணலியில் மிளகு சோம்பையும் வறுத்து தனியே பொடித்து வைக்கவும். புளியை சுடுநீரில் ஊற விடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து  நறுக்கிய வாழைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் கரைத்த புளியை ஊற்றி தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விடவும்.

காய் வெந்ததும் கொடுத்து வைத்துள்ள பொடிகளை தூவி முதலில் கடலைப்பருப்பு பொடியை தூவி நன்கு கிளறிவிட்டு இறக்கும்போது மிளகு சோம்பு பொடியை தூவி மேலும் சிறிது கருவேப்பிலைகளையும் போட்டு கிளறி மூடிவைக்கவும். இந்த எண்ணெய் மிளகு வாழைக்காய் கறி சோற்றுக்கு பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

ஸ்பைசி வாழைக்காய் வறுவல்

தேவை:
வாழைக்காய் - 2 (முற்றியது) 
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 அங்குலம்
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார்த்தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு , உளுந்து - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

இதையும் படியுங்கள்:
சாமை பெசரட்டும், பணி வரகு உப்புமாவும்!

Banana recipes

செய்முறை:

வாழைக்காயின் தோலையும் நீக்கி சிறு நீளத்துண்டுகளாக நறுக்கி நீரில் போடவும். மிக்சியில் மிளகு இஞ்சி பூண்டு சோம்பு போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பொடிகள் அனைத்தையும் ஒரு தட்டில் தேவையான உப்பும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,  1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வாழைக்காய்களை போட்டு   பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை வறுத்து எடுக்கவும்.

அதிலேயே மீதமுள்ள எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அரைத்த விழுது, மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து ஒருமுறை கிளறி   வறுத்து வைத்துள்ள வாழைக்காயை  சேர்த்து நன்கு கிளறி  சிறிது நேரம் மூடி  வேகவைத்து இறக்கினால், சுவையான வாழைக்காய் வறுவல் தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சூப்பர் சாய்ஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com