சத்தான சல்லடைப் புட்டு!

சத்தான சல்லடைப் புட்டு!

தேவை: சலித்த அரிசி மாவு – 1 கப், ஃப்ரெஷ் தேங்காய்ப்பூ – ½ கப், வெல்லம் (பொடி செய்தது) – ½ கப், ஏலப்பொடி – 1 டீஸ்பூன், தண்ணீர் – சிறிது.

செய்முறை: முதலில் ஒரு தட்டில் அரிசி மாவைப் போட்டு, லேசாகத் தண்ணீர் தெளித்து கட்டி தட்டாமல் நன்கு பிசிறிக்கொள்ளவும். பிடிக்கையில் பிடிபட வேண்டும். விட்டால் உதிரியாக வேண்டும்.

தேங்காய்ப்பூ, வெல்லப்பொடி, ஏலப்பொடி மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மிக்ஸ் செய்துகொள்ளவும்.

சிறு சல்லடை ஒன்றினுள் வெள்ளைப் பருத்தித் துணியைப் போட்டு, அதற்குள்ளே பிசிறி வைத்து இருக்கும் அரிசிமாவில் பாதியைப் போட்டு, அதன் நடுவே தேங்காய்ப் பூ கலவையை வைத்து, மீதி மாவை மேலே நன்கு பரப்பி துணியால் அழுத்தி மூடவும்.

பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, அதன் மேலே பாத்திரத்தில் பொருந்தும்படி சல்லடையை வைத்து, சுமார் 15 நிமிடங்கள் வேகவிடவும்.

பின்னர் வெளியே எடுத்து துணியைத் திறக்கையில் மணம் கமகமக்கும். சிறிது தேங்காய்ப் பூவை லேசாகத் தூவி... நெய்யுடன் சாப்பிட, சுவையாக இருக்கும். சத்தானது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com