கடலைப் பருப்பு பலாப்பழ பாயசம்!

கடலைப் பருப்பு பலாப்பழ பாயசம்!

தேவையான பொருட்கள்:

டலைப் பருப்பு - 100 கிராம், பலாச்சுளை (பெரிது) - 10 சுளைகள், தேங்காய் - 1 மூடி,  வாழைக்காய் - 1, வெல்லம் - கால் கிலோ, பால் - அரை லிட்டர், ஏலக்காய் - 4,  ஜாதிக்காய் - சிறிய துண்டு, மிளகு-15. நெய் - 2 ஸ்பூன்.

செய்முறை:

லாச்சுளைகளை கொட்டை நீக்கி நான்காக நறுக்கிக்கொண்டு, தேங்காயையும் அதே சைஸில் நீட்டு வாக்கில் நறுக்கிக்கொள்ள வேண்டும். வாழைக்காயைத் தோல் நீக்கிக் குறுக்கில் இரண்டு துண்டுகளாக்கி ஒவ்வொரு துண்டையும் ஆறாக நீட்டுவாக்கில் நறுக்கி வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

கடலைப் பருப்பை ஊற வைத்து (மிக்ஸியில்) நைசாக அரைத்துக்கொண்டு, அத்துடன் கொஞ்சம் நீர்விட்டுக் கரைத்து, மிதமான தீயில் அடி பிடிக்காமல் கிளறிக் கொஞ்சம் கொதித்ததும் வெல்லம் போட்டு, வெல்லம் கரைந்து எல்லாம் சேர்ந்து கொதிக்கும்போது, பலாச்சுளை, தேங்காய், வெந்த வாழைக்காய்களைப் போட்டு எல்லாம் சேர்ந்து ஐந்து நிமிஷம் கொதித்ததும் காய்ச்சிய பாலை விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவேண்டும்.

நெய் விட்டுப் பொறித்த மிளகை நைசாகப் பொடி செய்து, ஏலக்காய், ஜாதிக்காய் களையும் பொடிசெய்து பாயசத்தில் போட்டுக் கையோடு கிளறி, மூடிவிடவும். சிறிது ஆறியபின் உபயோகித்தால் அதன் ருசி மிளகு வாடையுடன் பிரமாதமாக இருக்கும்! மிதமான தீயில் அடி பிடிக்காமல் கிளறிக் கொஞ்சம் கொதித்ததும் வெல்லம் போட்டு, வெல்லம் கரைந்து எல்லாம் சேர்ந்து கொதிக்கும்போது, பலாச்சுளை, தேங்காய், வெந்த வாழைக்காய்களைப் போட்டு எல்லாம் சேர்ந்து ஐந்து நிமிஷம் கொதித்ததும் காய்ச்சிய பாலை விட்டு ஒரு கொதிவிட்டு இறக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அதென்ன BRAIN DUMPING வழிமுறை? 
கடலைப் பருப்பு பலாப்பழ பாயசம்!

நெய் விட்டுப் பொறித்த மிளகை நைசாகப் பொடி செய்து, ஏலக்காய், ஜாதிக்காய்களையும் பொடிசெய்து பாயசத்தில் போட்டுக் கையோடு கிளறி, மூடிவிடவும். சிறிது ஆறியபின் உபயோகித்தால் அதன் ருசி மிளகு வாடையுடன் பிரமாதமாக இருக்கும்!

- நீலா கோபாலன், மன்னார்குடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com