சமையல் செய்யும்போது சில சமாளிப்பு டிப்ஸ்களையும் தெரிந்துகொள்வோமா?

tips while cooking
Samayal tips
Published on

சாதம் வடித்த கஞ்சி கட்டியாக இருந்தால் அதோடு உப்பு காரம் ஆகியவற்றை கலந்து வெயிலில் கூழ் வடகமாக இடலாம் இது மிகவும் ருசியாக இருக்கும்.

இஞ்சியை துவையல் செய்தால் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்துக்கொள்ள முடியாது. நீண்ட நாள் வைத்திருக்க இஞ்சி ஐம்பது கிராம் கொத்தமல்லி பத்து கிராம் சீரகம் அரை தேக்கரண்டி தேவையான அளவு உப்பு புளி எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும். நல்லெண்ணையில் கடுகு போட்டு நன்றாக கிளற வேண்டும். கடைசியில் கொஞ்சம் வெல்லம் போட்டு சுருள கிண்டி இறக்கிவைத்து ஆறிய பின் தண்ணீர் படாமல் பாதுகாத்து வைத்துக்கொள்ளவேண்டும். சாதத்தில் போட்டு சாப்பிடலாம். தோசை அடை போன்றவற்றிற்கு தொட்டு கொள்ளலாம்.

பொடிக்கு மிளகாயை வறுக்கும்போது அதோடு ஒரு பிடி நிலக்கடலையை சேர்த்துக்கொள்ளுங்கள். நல்ல சுவையுடன் இருக்கும். கறி வகைகள் செய்யும்போது இந்த கலவையை மேலாக தூவினால் கறி வகைகள் மிகவும் சுவையாக இருக்கும்.

அடை மிகவும் சுவையான உணவு. ஆனால் எளிதில் ஜீரணம் ஆகாது. நிறைய எண்ணெய் விட்டு செய்வதால் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட பயப்படுவார்கள். அதே நேரம் மாவு புளித்து விட்டால் அதில் செய்யும் அடை எல்லோருக்கும் பிடிக்காது. எனவே புளித்த அடை மாவு மிஞ்சிவிட்டால், அதனை இட்லி தட்டில் ஊற்றி இட்லியாக சாப்பிடலாம் சுவையாக இருக்கும். எண்ணெயும் தேவையில்லை தொட்டுக்கொள்ள மிளகாய் பொடி போதுமே. ஆவியில் வெந்ததால் ரத்த கொதிப்புகாரர்களும் பயப்பட வேண்டியதில்லை.

தோசை மாவில் உளுந்து அதிகம் கலந்துவிட்டால் தோசை சரியாக வராது. எடுக்கவும் சிரமமாக இருக்கும். என்ன செய்யலாம்? பக்கத்திலேயே ஒரு பாத்திரத்தில் வெந்நீரை வைத்துக் கொள்ளுங்கள். தோசையை திருப்பும் போதும் எடுக்கும் போதும், திருப்பி கரண்டியை வெந்நீரில் நனைத்துக்கொண்டு கரண்டியை வெந்நீரில் நனைத்து கொண்டு எடுங்கள் கல்லிலும் ஒட்டாது தோசையும் சிதறாது.

இதையும் படியுங்கள்:
உணவுப் பொருட்களை வீணாக்காமல் இருக்க உதவும் டிப்ஸ்!
tips while cooking

கேரட்டை ஆவியில் வைத்து எடுத்து மை போல அரைத்து அதோடு பால் சர்க்கரை டால்டா அல்லது நெய் ஊற்றி கிளறி சிறிது எஸென்ஸ் விட்டு விட்டால் மிகவும் அருமையான இனிப்பு தயாரித்து விடலாம். அல்வா பதமாவோ பர்பி பதமாவோ இறக்கிக் கொள்ளலாம்.

வெங்காயத்தை சாலட் செய்யும்போது அதோடு தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

பச்சரிசியை ஊறவைத்து நைசாக கிரைண்டரில் அரைத்து மாவை கிளறி கொழுக்கட்டை செய்து பாருங்கள் சொப்பு மெல்லியதாகவும் இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும்.

எவ்வளவு அக்கறை எடுத்து செய்தாலும் தக்காளி சாதம் சப்பென்று இருப்பதாக நினைக்கிறீர்களா? கொஞ்சமா மசாலாப் பொடியை தூவிப்பாருங்கள். இது தக்காளி சாதமா அல்லது தேவாமிர்தமா என்று கேட்கத்தோன்றும்.

கருவேப்பிலையை பொடி செய்வது போலவே முருங்கை இலையைக் கொண்டும் பொடி செய்து வைத்துக் கொண்டால் மகப்பேறு ஆன பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பால் கொடுக்கும் பெண்களுக்கும் சிறந்த மருத்துவ உணவாகப் பயன்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com