
கிளறி கொட்டிய அடை :
பச்சரிசி கால் கிலோ
துவரம் பருப்பு 50 கிராம்
கடலைப்பருப்பு 50 கிராம்
தேங்காய் துருவல் 1 மூடி
சீரகம் 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையானது
அரிசி பருப்புகளை ரவையாக உடைத்துக் கொள்ளவும். சல்லடை கொண்டு மாவை சலித்து நீக்கிவிட்டு ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற அளவில் வாணலியில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நடுக் கொதி வரும்வரை கொதிக்கவிடவும். நடுக்கொதி வந்ததும் உடைத்து வைத்த ரவையை சேர்த்து கிளறவும். மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து, கறிவேப்பிலை, தேங்காய் துருவலையும் சேர்த்து எல்லாவற்றையும் கலந்து கிளறி இறக்கவும். சிறிது சூடு ஆறியதும் மாவை அடைகளாகத் தட்டி இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும். மிகவும் ருசியான இந்த அடை மேலாக மொறுமொறுப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ருசியான அடைக்கு வெல்லம், வெண்ணை, தேங்காய் சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
தேங்காய் சட்னி :
தேங்காய் துருவல் ஒரு கப்
உப்பு தேவையானது
பச்சை மிளகாய் 4
புளி சிறிய நெல்லிக்காயளவு
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்
தேங்காய் துருவலுடன் உப்பு, பச்சை மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். தேவையான அளவு தண்ணீர், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொட்ட மிகவும் ருசியான தேங்காய் சட்னி தயார்.