
மாறுதலான சுவையில் அதேசமயம் அசத்தலாக இருக்கும், செய்வதற்கு எளிதான இந்த மெக்சிகன் யோகர்ட் டிப் பன்கள், ரொட்டிகள், சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். அருமையான சுவையில் இருக்கும் இதனை செய்வதும் எளிது.
மெக்சிகன் கிரீமி யோகர்ட் டிப்:
தயிர் 200 கிராம்
ஜலபெனோஸ் 3 ஸ்பூன்
சிவப்பு குடைமிளகாய் 1/2
பச்சை குடைமிளகாய் 1/2
தபாஸ்கோ(Tabasco) சிறிதளவு
உப்பு தேவையானது
டிபார்ட்மென்டல் கடைகளில் ஜலபெனோஸ், தபாஸ்கோ போன்றவை கிடைக்கும்.
அதிகம் புளிப்பில்லாத கெட்டி கிரீமி தயிராக எடுத்துக் கொள்ளவும். சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய், விருப்பப்பட்டால் மஞ்சள் குடைமிளகாயையும் எடுத்து பொடியாக நறுக்கி அல்லது துருவி எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கண்ணாடி பௌலில் கிரீமி தயிர், பொடியாக நறுக்கப்பட்ட ஜலபினோஸ், துருவிய அல்லது பொடியாக நறுக்கிய பச்சை குடைமிளகாய் மற்றும் சிவப்பு குடைமிளகாய், சிறிதளவு தபாஸ்கோ சேர்த்து தேவையான அளவு உப்பும் போட்டு நன்கு கலக்கவும். மிகவும் ருசியான இந்த யோகர்ட் டிப் செய்வது மிகவும் எளிது.
Tabasco மிளகு என்பது மிளகாய் வகைகளில் ஒன்றாகும். தபாஸ்கோ, மிளகுத்தூள், வினிகர், உப்பு சேர்ந்த கலவை தான் சாஸாக விற்கப்படுகிறது. மிகவும் ருசியாக இருக்கும்.
சிம்பிள் சீஸ் டிப்:
சீஸ் துண்டுகள்
தக்காளி 2
பால் 1/2 கப்
உப்பு சிறிது
எண்ணெய் 1 ஸ்பூன்
தக்காளியை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெய், உப்பு சேர்த்து அடி கனமான வாணலியில் நன்கு கிளறவும். நன்கு சுருண்டு வரும் சமயம் பால் சேர்த்து சீஸ் கட்டி துண்டுகளை துருவிப்போட்டு நன்றாக கிளறவும். இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்க மிகவும் ருசியான சீஸ் டிப் தயார்.
இதனை சப்பாத்தி, பூரி, நாச்சோ சிப்ஸ், ரொட்டிகளுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். செய்வதும் ரொம்ப சுலபம்.