தாய்லாந்தின் புகழ்பெற்ற தாம் யம் சூப் செய்வோமா?

தாம் யம் சூப்
தாம் யம் சூப்holisticchefacademy.com

செய்முறை மற்றும் தேவையான பொருட்கள்:

முதலில் காளானை நன்றாக கழுவிவிட்டு சிறியதாக நறுக்கவும். ஒரு கேரட், 5 முதல் 6 பீன்ஸ், 1 முதல் 2 வெங்காயம்  மற்றும் இரண்டு பூண்டு நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

எலுமிச்சை கிராஸ் தண்டின் வெளிப்பகுதியை நீக்கிவிட்டு உள்பகுதியை நறுக்கி வைக்க வேண்டும். எலுமிச்சை கிராஸ் தண்டு இல்லையென்றால் லெமன் இலையையும் பயன்படுத்தலாம். இஞ்சி, தாய் மிளகாய் ஆகியவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் 2 டேபில் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சின்ன வெங்காயம் இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் மீடியமாக வதக்கவும். அதன் பின்னர் நறுக்கி வைத்த அனைத்து காய்கறிகளையும் சேர்க்கவும். ஒரு நிமிடம் சமைத்த பின்னர் மூன்று கப் தண்ணீர் சேர்க்கவும். எலுமிச்சைத் தண்டு மற்றும் தாய் மிளகாய் மற்றும் கலங்கா என்ற வகையான இஞ்சி  (சாதாரண இஞ்சி) சேர்க்க வேண்டும். அதனுடன் எலுமிச்சை இலை (லைம் இலை), சோயா சாஸ், உப்பு சேர்த்து மூடி வைக்கவும். மிதமான சூட்டில் மூடி வைத்து காய்கறிகள் வேகும் வரை சமைக்கவும்.

இதையும் படியுங்கள்:
முறிந்த கையைக்கொண்டு உழைக்கலாம்; ஒடிந்த மனதோடு உழைக்க முடியாது!
தாம் யம் சூப்

காய்கறிகள் மென்மையாக வெந்த பின்னர் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். சர்க்கை இல்லையென்றால் வெள்ளம் அல்லது தேங்காய்ப்பால் ஆகியவையும் சேர்த்துக்கொள்ளலாம். மீண்டும் ஒருமுறை சோயா சாஸ் கலந்து ஒரு நிமிடம் வேகவைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கிய பின்னர் எலுமிச்சைசாறு கலந்து மல்லி இலை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சாப்பிடும்போது மிளகாய், எலுமிச்சை தண்டு ஆகியவற்றை நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com