வித்யாசமான சுவையில் மூன்று வகை தோசை செய்வோமா?

Variety dosai
பச்சை பயறு தோசைImage credit - youtube.com
Published on

செம்பருத்தி இலை தோசை

தேவையான பொருள்கள்:

செம்பருத்தி இலைகள்     25

பச்சரிசி    1½  கப் 

அவல்   ½ கப்

பொடிசா நறுக்கிய வெங்காயம்   1

நறுக்கிய பச்சை மிளகாய்  2

பொடிசா நறுக்கிய இஞ்சி துண்டு 1 டீஸ்பூன் 

வெல்லம்  1 டீஸ்பூன் 

உப்பு, எண்ணெய் நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை இலை - தேவைக்கேற்ப.

செய்முறை:

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் அதனுடன் தண்ணீர், அவல் மற்றும் செம்பருத்தி இலைகளை சேர்த்து மிக்ஸியில் மசிய அரைத்துக் கொள்ளவும். ஆறு மணி நேரம் அப்படியே வைத்து நொதிக்க விடவும். பிறகு அந்த மாவில் உப்பு சேர்த்துக் கலந்து, மாவை இரண்டு பங்காகப் பிரித்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாகத்தில் வெல்லம் சேர்த்துக் கலந்து தோசைகளாக சுட்டு எடுக்கவும். மற்றொரு பங்கிலிருந்து மாவை எடுத்து சூடான கல்லில் தோசையாக ஊற்றி அதன் மீது நறுக்கிய ஸ்பைஸஸ்களை பரத்தி கரண்டியால் லேசாக அழுத்தி, சுற்றிலும் எண்ணெய் சேர்த்து, திருப்பி விட்டு 

சுட்டெடுக்கவும். ஒரு ஸ்வீட், ஒரு காரதோசை என பரிமாறி சட்னி தொட்டு சாப்பிடவும்.

தக்காளி தோசை:

தேவையான அளவு தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை பேஸ்ட்டாக அரைத்துக்  கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு தூள் சேர்த்து, அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட்டையும் ஊற்றி  கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். பின் குளிர்ந்தவுடன் இக்கலவையை வழக்கமான தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து தோசை கல்லில் நெய் அல்லது எண்ணெய் தடவி மொறு மொறு தோசைகளாக சுட்டெடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான மஞ்சள் பூசணி தோசை-பச்சை மிளகாய் மண்டி செய்யலாமா?
Variety dosai

பனானா தோசை:

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் ரவா, முக்கால் கப் ஊறவைத்த அவல், நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள் அரை கப், இரண்டு டேபிள்ஸ்பூன் வெல்லம், ஒரு கப் தயிர், உப்பு மற்றும் ஏல பவுடர் தலா அரை டீஸ்பூன் சேர்த்து நீருற்றி அரைத்தெடுக்கவும். அதில் கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து தோசைகளாக சுட்டெடுக்கவும். தேன் அல்லது சட்னியுடன் சேர்த்து சுவைத்து உண்ணவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com