விளாம்பழ பர்பி:
பழுத்த விளாம்பழம் 2
பொட்டுக்கடலை மாவு 1 கப்
சர்க்கரை 50 கிராம்
பனை வெல்லம் 100 கிராம்
நெய் 4 ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் 1/2 ஸ்பூன்
நன்கு பழுத்த விளாம்பழத்தை உடைத்து ஓடை எடுத்துவிட்டு உள்ளிருக்கும் பழத்தை நன்கு மசித்து அல்லது மிக்ஸியில் போட்டு விழுதாக்கிக் கொள்ளவும். அத்துடன் பொடித்த சர்க்கரை மற்றும் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலக்கவும்.
வாணலியில் பனைவெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் விட்டு கரைந்ததும் வடிகட்டி கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்கள் நன்கு கொதித்ததும் கலந்து வைத்துள்ள விளாம்பழக் கலவையை சேர்த்து நெய் விட்டு சுருளக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் வரும் பதம் வரை கிளறி ஏலப்பொடி தூவி இறக்கவும். நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி சிறிது ஆறியதும் வில்லைகள் போடவும். ருசியான விளாம்பழ பர்பி தயார்.
ஆனியன் முறுக்கு:
அரிசி மாவு ஒரு கப்
உளுத்த மாவு 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் 10
மிளகாய் வற்றல் 4
வெள்ளை எள் 1 ஸ்பூன்
வெண்ணெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன் எண்ணெய் பொரிக்க
சின்ன வெங்காயத்தை தோலுரித்து மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் அரிசிமாவு, உளுந்தை சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடித்து சலித்தெடுத்த மாவு 2 ஸ்பூன் சேர்த்து எள், பெருங்காயத்தூள், வெண்ணெய் அரைத்த வெங்காய மசாலா அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு மிருதுவாக பிசைந்து கொள்ளவும். முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி மாவை நிரப்பி சூடான எண்ணெயில் பிழிந்தெடுக்க மிகவும் ருசியான, மணமான ஆனியன் முறுக்கு தயார்.
செய்துதான் பாருங்களேன்!