
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 20
நெய் - 1/4கிலோ
சர்க்கரை - 1/2கிலோ
முந்திரி பருப்பு - 50கிராம்
ரோஸ் எஸென்ஸ் - சிறிதளவு
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீருடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்கவும். பாகு நன்கு காய்ந்து கம்பி பதம் வரும் போது அதில் சிறிதளவு ரோஸ் எஸென்ஸ் சேர்த்து இறக்கி விடவும்.
பிறகு வாணலியில் நெய் விட்டு அடுப்பில் வைக்கவும். நெய் காய்ந்ததும் பிரட் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து காய்ந்த பாகில் போட்டு நன்கு ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் எடுத்து அதன் மீது நெய்யில் வறுத்த முந்திரி பருப்புகளை பதிய வைக்கவும்.
வெண்ணெய் பாதுஷா
தேவையான பொருட்கள்:
சீனி - 1/4கிலோ
வெண்ணெய் - 100கிராம்
மைதா மாவு - 1/2கிலோ
சோடா உப்பு - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 1/4 லிட்டர்
செய்முறை:
மைதா மாவை சலித்து எடுத்து கொண்டு அத்துடன் வெண்ணெய், சிறிது சோடா உப்பு சேர்த்து நீர் விட்டு தளர்த்தி பிசைந்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கம்பி பதமாக சர்க்கரை பாகு காய்ச்சி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து எண்ணெய் நன்கு காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டையாக பொரித்து எடுத்து சீனி பாகில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து விட வேண்டும்.
காரட் பர்பி
தேவையான பொருட்கள்:
காரட் - 1/2கிலோ
சர்க்கரை - 1/2கிலோ
பால் - 1/4லிட்டர்
நெய் - 200 கிராம்
ஏலக்காய் - 5
முந்திரி பருப்பு - 50கிராம்
எஸென்ஸ் - சிறிதளவு
செய்முறை:
முதலில் காரட் டை நன்றாக சீவி சுத்தம் செய்து துருவி கொண்டு பாலுடன் சேர்த்து நன்கு வேகவைத்து தனியாக எடுத்து கொள்ளவும். சர்க்கரை பாகு காய்ச்சி கொள்ளவும்.
வேகவைத்த காரட்டை பாகுடன் சேர்த்து நெய் ஊற்றி நன்றாக கிளறவேண்டும். கெட்டியாக பதம் வந்தவுடன் வறுத்த முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள் எஸென்ஸ் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து தட்டில் கொட்டி துண்டுகள் போட்டு கொள்ளவும். தீபாவளி பண்டிகை க்கு எளிதான, சத்தான, சுவையான இனிப்புகளை செய்து மகிழ்ச்சி அடையுங்கள்.