வீட்டு ஜன்னல் திரைகளைத் தேர்வு செய்வது எப்படி?

Window screens
Window screens

வீட்டுக்குக் காற்றோட்டத்தையும் வெளிச்சத்தை தருவதிலும் ஜன்னல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த ஜன்னல்களுக்கு அழகூட்டும் வகையில் அவற்றுக்கு திரைகள் போடுவது வீட்டை தூசியிலிருந்து காப்பதோடு, அறைகளுக்கு அழகூட்டுபவையாகவும் திகழ்கின்றன. வீட்டு ஜன்னல்களுக்கு எது போன்ற திரைகள் போட, ஏதுவாக இருக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* வீட்டு சுவரின் நிறத்தையும், சோபாவின் நிறத்தையும் பொறுத்து திரைகளின் நிறத்தை தேர்வு செய்ய வேண்டும்.

* திரைகளில் பிரதான ஸ்கிரீன், மெல்லிய துணி ஸ்கிரீன், இரண்டடுக்கு ஸ்கிரீன் (மெல்லிய மற்றும் பிரதான ஸ்கிரீன்) என மூன்று வகைகள் உள்ளன.

* ஸ்கிரீன்கள் பருத்தி, பாலியெஸ்டர் மிக்ஸ், பாலியெஸ்டர் மற்றும் வெல்வெட் கலந்த பாலி சில்க் போன்ற துணி வகைகளில் தற்போது அதிகம் இருக்கிறது.

* திரைகளின் தரம் மற்றும் விதவிதமான அளவில் ரெடிமெட் ஸ்கிரீன்களும் கடைகளில் கிடைகின்றன.

* வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறையை பொறுத்து ஸ்கிரீன்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

* படுக்கையறைக்கு வெளிச்சத்தை மறைக்கும்படி திக்கான துணியில், டார்க் நிறத்தில் தேர்தெடுக்க வேண்டும். அதனால் இரவில் வெளிச்சம் வராமல் இருக்கும். நல்ல தூக்கம் வரும்.

* வரவேற்பறைக்கு வெளிச்சம் வரும் வகையில் வேறு விதமான ஸ்கிரீன்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

* பால்கனி போன்ற அதிக வெயில் வரும் இடங்களில் மூங்கிலினால் ஆன ஸ்கிரீன்களை போடலாம்.

* வெயில் அதிகம் வரும் நேரத்தில் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, மற்ற நேர்த்தில் அவற்றை சுருட்டி வைக்கவும் இயலும்.

* வீட்டில் பொதுவாக ஸ்கிரீன் அமைக்கும்போது வெளியில் இருந்து பார்த்தால், அவை இருப்பது தெரியாமலும், புற வெளிச்சம், வெப்பம் ஆகியவை அறைகளுக்குள் பரவாதவாறும் ஸ்கிரீன்கள் அமைக்க வேண்டும். அதேசமயம் தேவையான அளவு காற்றோட்டம் வரும் வகையிலும் அது இருக்க வேண்டும்.

* ரெடிமேட் ஸ்கிரீன்கள் சுமார் 100 ரூபாயிலிருந்து கிடைக்கிறது.

* நல்ல துணியாக தேர்வு செய்தால் விலையும் அதிகமாகும்.

* ஸ்கிரீன்களை தேர்வு செய்யும்போது, அதை மாட்டும் கம்பிகளையும் தேர்வு செய்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் படுக்கை அறையை வெப்பமாக வைத்திருப்பது எப்படி?
Window screens

* பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் அவை விதவிதமான டிசைன்களில் கிடைக்கின்றன.

* ஸ்பிரிங், அலுமினியம், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் அகியவற்றில் ஸ்கிரீன் கம்பிகள் உள்ளன.

* வெளியிலிருந்து வரும் தூசிகள் ஸ்கிரீன்களில் படியும். நாளுக்கு நாள் அந்த தூசி அதிகரிக்கும் என்பதால் வாரம் ஒரு முறையாவது ஸ்கிரீன்களை துவைப்பது அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com