சிம்பிள் & டேஸ்ட்டி ஈவினிங் ஸ்நாக்ஸ்!

காரா பூந்தி...
காரா பூந்தி...

மாலையில் டீ காப்பியுடன் சேர்த்து சாப்பிட சிறந்த ஸ்நாக்ஸ் வகைகள் சில. செய்வது ரொம்ப சுலபம். கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்தால் கணிசமும் இருக்கும். ஆரோக்கியமும் நிலைக்கும். வெளியில் கண்ட எண்ணெயில் பொரிப்பதை வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் செய்து சாப்பிடுவது தனி சுகம் தான்.

காரா பூந்தி: கடலை மாவு ஒரு கப் அரிசி மாவு 2 ஸ்பூன் பேக்கிங் சோடா ஒரு சிமிட்டு காரப்பொடி ஒரு ஸ்பூன் பெருங்காய பொடி சிறிது மஞ்சள் பொடி சிறிது வேர்க்கடலை ஒரு கைப்பிடி கருவேப்பிலை சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து லட்டு கரண்டியில் விட்டு எண்ணெயில் தேய்த்து எடுக்கவும். கடைசியாக வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்து போடவும். கருவேப்பிலையை சிறிது உருவி எண்ணெயில் போட்டு பொரித்து கலக்க சூப்பரான காராபூந்தி தயார்.

நாடா:

நாடா...
நாடா...

அரிசி மாவு 3 கப் கடலை மாவு 2 கப் உப்பு, காரப்பொடி சிறிது பெருங்காயம் சிறிது வெண்ணெய் 2 ஸ்பூன் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, காரப்பொடி, பெருங்காயம், வெண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகக் கலந்து தேவையான அளவு நீர் விட்டு பிசைந்து ரிப்பன் அச்சில் போட்டு பிழிந்து எடுக்க நாடா ரெடி.

 தேன்குழல்:

 தேன்குழல்
தேன்குழல்

அரிசி மாவு 5 கப் வறுத்து பொடித்து சலித்த உளுத்த மாவு. 1 கப் சீரகம் ஒரு ஸ்பூன் வெண்ணெய் 2 ஸ்பூன் உப்பு சிறிது மேற்குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையான அளவு நீர் விட்டு பிசைந்து தேன்குழல் அச்சில் போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்க தேன் குழல் தயார். ருசியை கூட்ட தண்ணீருக்கு பதில் தேங்காய் பால் கலந்து செய்யலாம். அதேபோல் தேங்காய் எண்ணெயில் பொரிக்க ருசி இரட்டிப்பாகும்.

இதையும் படியுங்கள்:
சோற்றுக் கற்றாழையின் அழகு + அரோக்கிய நன்மைகள்!
காரா பூந்தி...

வாரத்துக்கு ஒன்றாக செய்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து டீ காபியுடன் மாலை வேளையில் சாப்பிட ஏற்றது. இரவு சப்பாத்தி பூரி போன்ற டிபனுக்கு தொட்டுக் கொள்ள சைட் டிஷ் எதுவும் பண்ண நேரமில்லை என்றால் 2 கைப்பிடி காராபூந்தியை கெட்டி தயிரில் போட்டு சிறிது உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி சாப்பிட காரா பூந்தி ராய்தா நொடியில் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com