அவசரத் தேவைக்கு உதவும் ஆறு வகை சட்னிகள்!

Six types of chutneys...
சட்னி வகைகள்Image credit - youtube.com
Published on

ண்டிகைக்கால பரபரப்பில் இருக்கும் பெண்களே! உங்களின் அவசரத் தேவைக்கு உதவும் ஆறு வகை சட்னிகளும் அவற்றை ஃபிரஷ்ஷா வைக்க உதவும் டிப்ஸ்களும்!

விழாக்கால பரபரப்பில் வீட்டில் தயாரிக்கப்படும் டிபன் மற்றும் ஸ்னாக்ஸ் வகையறாக்களுக்கு அவ்வப்போது சைட் டிஷ் செய்வது இயலாத ஒன்று. உங்களுக்காகவே இந்தப் பதிவு. சில வகை சட்னிகளும், அவற்றை நீண்ட நேரம் ஃபிரஷ்ஷா வைக்க உதவும் டிப்ஸ்களும் இதோ.

தக்காளி சட்னி: தக்காளியுடன் சிவப்பு மிளகாய், வெங்காயம் கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி உப்பு  சேர்த்து அரைத்து, கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து கொட்ட சுவையான தக்காளி சட்னி ரெடி. உப்மா, தோசை, பொங்கல் எதனுடனும் சேர்த்துக் கொள்ளலாம்.

பூண்டு சட்னி: பூண்டு, புளி, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை நல்லெண்ணெயில் வதக்கி உப்பு சேர்த்து அரைக்க சுவையான பூண்டு சட்னி தயார். தோசை, இட்லி, சப்பாத்தியுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

இஞ்சி சட்னி: இஞ்சி, புளி, வெல்லம், உப்பு சேர்த்து மசிய அரைத்தால் புளிப்பு, இனிப்பு, கார சுவையுடன்  ஆரோக்கியமான சட்னி தயார். பெசரட்டு, தோசை, இட்லிக்கு சேர்த்துக் கொள்ளலாம்.

வேர்க்கடலை சட்னி: வறுத்த வேர்க்கடலை பருப்புடன்  புளி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக்கொட்டி, ஸ்னாக்ஸ்ஸுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

5. பருப்பு சட்னி: சிறிதளவு எண்ணெயில் சன்னா டால் மற்றும் பச்சை மிளகாயை வறுத்து உப்பு தேங்காய் சேர்த்து அரைத்தெடுத்து, கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட சுவையான பருப்பு சட்னி ரெடி.

கொத்தமல்லி சட்னி: கொத்தமல்லி இலைகளுடன் பச்சை மிளகாய், உப்பு, புளி சேர்த்து அரைத்து லெமன் ஜூஸ் சேர்க்க மல்லி சட்னி தயார்.

மேலே குறிப்பிட்ட சட்னிகளை நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்க உதவும் டிப்ஸ்:

1. சட்னிகளை ஸ்டெரிலைஸ் (Sterilize) செய்யப்பட்ட காற்றுப் புகாத கண்ணாடி ஜார்களில் சேமித்து வைக்கலாம். ஸ்டெரிலைஸ் பண்ணுவதால் சட்னிகளில் பாக்டீரியாக்கள் வளர்வது தடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி ஸ்பெஷல் கருப்பட்டி மைசூர் பாக்-ஓமப்பொடி செய்யலாமா?
Six types of chutneys...

2. தயிர், புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் போன்ற ஃபிரஷ்ஷான பொருட்களால் தயாரிக்கப்படும் சட்னிகளை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாப்பது நலம்.

3. சட்னியின் மேற்பரப்பில் ஒரு அடுக்கு நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ஊற்றி வைக்கலாம். இது காற்று உட்புகுந்து சட்னி கெட்டுவிடாமல் பாதுகாக்க உதவும்.

4. சட்னி மீது வினிகர் அல்லது லெமன் ஜூஸ் ஊற்றி வைக்கலாம். இவை இயற்கை முறையில், பாக்டீரியாக்கள் வளர்வதைத் தடுக்கும் பாதுகாப்பானாக செயல் புரிந்து சட்னி கெட்டுப் போவதைத் தடுக்கும்.

5.சட்னியை உபயோகத்திற்கு எடுக்கும்போது எப்பொழுதும் சுத்தமான, ஈரமில்லாத உலர்ந்த ஸ்பூன் கொண்டு எடுப்பது சட்னி மாசடையாமல் பாதுகாக்க உதவும்.

மேற்கூறிய டிப்ஸ்கள் உங்கள் வேலைப் பழுவைக் குறைக்க உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com