

குளிர் பனிக்காலம் வந்துவிட்டால் சருமத்தில் ஒருவித சுருக்கத்தை காணலாம். அதிலும் வயதானவர்களின் சருமம் அதிக சுருக்கத்துடன் காணப்படும். இந்த சீசனில் சருமத்தின் மீது ஒரு உறை இருப்பதைக் காணமுடியும். இதற்கெல்லாம் காரணம் என்ன? அதை எப்படி போக்கலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.
உடம்பில் செல்கள் எரிந்த நிலை, சுற்றுச்சூழல், சூரிய வெப்பம், போதிய போஷாக்கான உணவு எடுத்துக் கொள்ளாமை போன்ற காரணங்களால்தான் உடலில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. நம் உடலின் மெட்டபாலிசம் புரதச்சத்தை தூண்டும் ஆக்டிவேட்டர் ப்ரோட்டின் 1 என்பது போதிய அளவில் கிடைக்கும்போது, நமது உடல் பளபளப்பும், விரிவடையும் தன்மையை 'கொலேஜன்' என்பதன் மூலம் தூண்டுவதால் இந்த சருமம் சுருக்கம் அடைய செய்கிறது.
இதற்கு போதிய ஊட்டச்சத்துள்ள உணவை தேர்வு செய்து சாப்பிடுவதாலும். காரத்தன்மை உள்ள உணவுகளை உண்ணுவதை தவிர்ப்பதாலும் சருமம் பளபளப்பாவதுடன் சருமம் சுருக்கத்தையும் தவிர்க்கலாம்.
மேலும் இதுபோல் சாப்பிடுவதால் புற்றுநோய், இதய நோய், மற்றும் வயிற்று நோய்கள் வராமல் தடுப்பது நடைபெறுகிறது. ஆண்களுக்கு ஒரு நாளைக்கு போதுமான புரதச்சத்து 80 கிராம் பெண்களுக்கு 65 கிராம் தேவைப்படுகிறது. இந்தப் புரதச்சத்துதான் நமது உடம்பில் உள்ள செல்களின் பழுதுகளை நீக்கும் முக்கிய கூறாக இருக்கிறது. குறிப்பாக கொலேஜன் செல் என்பது பழுதடையாமல் தடுக்கும்.
ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, இரண்டுவேளை சிற்றுண்டி என்று பிரித்து உண்ணும்பொழுது சரும பாதுகாப்பு மேம்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தேவையான அளவு நீர் அருந்துவதற்கு எப்பொழுதும் முன்னுரிமை கொடுப்போம். அப்படி அருந்தும் நீரை நன்றாகக் கொதிக்கவைத்து குடித்தால் நல்லது. அதில் குளோரின் கலந்து இருந்தாலும்,
ஆரோக்கியமற்ற இரும்புச்சத்து குழாயில் கலந்து வந்தாலும் அதை காய்ச்சி குடித்துவிட்டால் தொந்தரவு இருக்காது என்பதால் அதைப் பின்பற்ற வேண்டும்.
காய்கறிகளில் கருமைப் படர்ந்த பச்சைக்கீரை, நேவி பீன்ஸ், காய்கறி வகைகளை சேர்த்து சாப்பிடுவதால் சருமத்தில் உள்ள இன்ஃப்ளமேட்ரி என்று சொல்லக்கூடிய எரியூட்டல் தன்மையை தடுக்க அது பெரிதும் உதவும். இதனுடன் ஓட் மீல்ஸ், பட்டாணி , கொட்டைவகைகளை சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
பழங்களில் பெர்ரி பழங்கள் ஸ்ட்ராபெரிஸ் ,பிளாக் பெரிஸ், ராஸ் பெரிஸ், புளூ பெர்ரீஸ் போன்ற வகைகள் கொலாஜனை குறைத்து தொடர்புள்ள சதையை பாதுகாக்கும். ஆதலால் தினசரி 100 மில்லி கிராம் எடுத்துக்கொள்ளலாம்.
அசைவ உணவு என்று வந்தால் புரதச்சத்தை வழங்குவதில் கோழி, சால்மன் மீன், முட்டை போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதில் சால்மன் மீனில் உள்ள கொழுப்பு திரவம் மிகவும் சரும பாதுகாப்புக்கு உதவி செய்கிறது. மீன் சாப்பிடுவதற்கு தயங்கினால் மீன் எண்ணெய், கேப்சூல் என்று கிடைக்கிறது. அவற்றை சாப்பிட்டு பயன் பெறலாம்.
ஆயில் வகைகளில் சருமத்தை பாதுகாப்பதில் ஆலிவ் ஆயில் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆலிவ் ஆயிலில் உள்ள ஓலிவ் ஆசிட் என்பது நம் உடம்பில் உள்ள செல்களுக்குள் நன்றாக நுழைந்து தோலை பராமரிப்பதற்குப் பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள சரும பாதுகாப்பிற்கான' பாலி பினோல்ஸ்' என்பது சரும சுருக்கத்தை போக்கி பளபளப்படையச் செய்கின்றது.
மேலும் இதை உணவில் சேர்த்து வரும்பொழுது இதயநோய் தடுப்பானாகவும் பயன்படுகிறது. இதனால்தான் சருமபாதுகாப்பு என்றால் ஆலிவ் ஆயிலை அதிகம் பயன்படுத்தும் அழகு குறிப்புகளை காண முடிகிறது.
ஆதலால் உடலில் சுருக்கத்தை போக்கி சருமத்தை பளபளப்பாக செய்யும் இதுபோன்ற உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு ஆரோக்கியம் காப்போம்!