

பொங்கல் என்றாலே Sleeping dose என பலர் ஒதுக்கி வைத்துவிடுவர். அந்த பொங்கலை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் எளிதாக செய்ய சில சிறுதானியப் பொங்கல் ரெசிபீஸ். சிறுதானியப் பொங்கலுக்கு பாசிப்பருப்பை சேர்க்காமல் செய்தால் பொங்கல் குழைவாக இருக்கும்; விரைவில் இறுகாது.
வரகு பொங்கல்
ஒருமணி நேரம் ஊறவைத்து எடுத்த வரகு + அரிசி – 2 + 1 கப்
வறுத்துப் பொடித்த சீரகம், மிளகு – ¼ கப்
நெய்யில் பொரித்த முந்திரிப் பருப்பு – ¼ கப்
குக்கரில் சிறிது நல்லெண்ணெய் விட்டு, அதில் வறுத்துப் பொடித்த சீரகம், மிளகு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
கொதிக்கும் நீரில் ஊறவைத்து எடுத்த வரகு + அரிசியை போட்டு கலந்து, உப்பு சேர்த்து குக்கரை மூடி குழைய வேகவைத்து எடுக்கவும்.
குக்கரைத் திறந்து அதில் பொரித்த முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை, சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்கு கலந்து சூடாக பரிமாறவும்.
திணை அரிசிப் பொங்கல்
நன்கு தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
சுத்தம் செய்த திணை அரிசியுடன் பச்சரிசி ஒரு கப் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு, சீரகம் சேர்த்து கறிவேப்பிலை வறுத்து பொடி செய்து வைக்கவும்.
முந்திரியை பொரித்து எடுக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து ஆயில் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லித் தழை போட்டு, அதனுடன் பொடித்த மிளகு, சீரகம் சேர்த்து நன்கு கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
பிறகு தண்ணீர் கொதித்ததும் திணை அரிசியை போட்டு நன்கு கலந்து குக்கரை மூடிவைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.
குக்கரைத் திறந்து சூடாக இருக்கும்போதே முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு கரண்டியால் கிளறிவிட்டு ஹாட் பேக்-இல் போட்டு வைக்கவும்.
சட்னி, சாம்பாருடன் சூடாக பரிமாறவும்.
சிறுதானியங்களோடு கொஞ்சம் கொள்ளுப்பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் தாளித்து பொங்கல் செய்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.