அடுப்படியில் அனல் வீசுகிறதா? சமையலறையை 'ஏசி' அறை போல குளிர்ச்சியாக மாற்ற எளிய வழிகள்!

smart-cooking-methods
smart-cooking-methods
Published on

கோடை வெயிலில் சமையலறையை குளிர்ச்சியாக வைக்க அதிகாலையில் சமைப்பதும், எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்துவதும் முக்கியம். குறிப்பாக அடுப்பு பயன்பாட்டை குறைக்க வேண்டியது அவசியம். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் அதிகம் சேர்ப்பதும், சீக்கிரம் கெட்டுப்போகும் உணவுகளை ஃப்ரிட்ஜில் முறையாக வைத்து பராமரிப்பதன் மூலம் கோடை வெப்பத்தை எளிதாக சமாளிக்க உதவும்.

அதிகாலையில் சமைப்பது:

காலை நேரத்தின் குளிர்ச்சியான வெப்பநிலையில் சமைப்பது நண்பகல் வெயிலில் சூடான அடுப்பின் முன் நிற்பதை தவிர்க்க உதவும். சமையல் செய்யும் நேரத்தை மாற்றலாம். அதிக வெப்பத்தை தவிர்க்க காலையிலோ அல்லது மாலையிலோ சமைக்கலாம். இதனால் சமையலறை குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேர சமையலை வெயில் தாழ்ந்த பிறகு தொடங்கலாம்.

வெப்பத்தை குறைக்கும் சமையல் முறைகள்:

அடுப்பு பயன்பாட்டைக் குறைத்து மைக்ரோவேவ், ஏர் பிரையர், இன்ஸ்டன்ட் பாட் (Instant Pot)அல்லது பிரஷர் குக்கரை பயன்படுத்தலாம். இவை குறைந்த வெப்பத்தையே வெளியிடும். இதனால் சமையலறை அதிகம் வெப்பமாகாது. காய்கறிகள், பருப்பு வகைகளை பிரஷர் குக்கரில் வேகவைப்பது சமையல் நேரத்தையும், வெப்பத்தையும் குறைக்கும். வறுப்பது, பொரிப்பது, நீண்ட நேரம் பேக்கிங் செய்வது போன்றவற்றை கோடை காலத்தில் குறைத்துக்கொள்ளலாம். இது சமையல் நேரத்தை குறைப்பதுடன், சமையல் அறையில் வெப்பம் பரவுவதையும் தடுக்கும்.

காற்றோட்டத்தை மேம்படுத்துதல்:

கண்டிப்பாக எக்ஸாக்ட் ஃபேனை பயன்படுத்தவும். ஜன்னல்களைத் திறந்து வைத்து காற்றோட்டத்தை அதிகரிக்கலாம். சமையலறை ஜன்னல்களில் திரைச்சீலைகளை போட்டு சூரிய ஒளி நேரடியாக வருவதை தடுப்பதன் மூலம் சமையலறையை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம். மேலும் ஜன்னல் ஓரங்களில் சிறிய தொட்டிகளில் மணி பிளான்ட், கொத்தமல்லி, வெந்தயம், கற்றாழை போன்ற செடிகளை வளர்ப்பதும் இயற்கையான குளிர்ச்சியைத் தருவதுடன் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்... வெயிலைப் பயன்படுத்தலாம்! கோடைக்கால வீட்டுப் பராமரிப்பு!
smart-cooking-methods

எளிமையான மற்றும் இலகுவான உணவுகள்:

கோடை வெயிலுக்கு அதிக நேரம் அடுப்படியில் நிற்காமல் இருப்பதற்கான இலகுவான, விரைவாக சமைக்கக் கூடிய உணவுகளை தயாரிக்கலாம். குறைந்த நேரமும், முயற்சியும் தேவைப்படும் விரைவாகவும், எளிதாகவும் தயாரிக்க கூடிய உணவுகளை தயாரிக்கலாம். புத்துணர்ச்சியூட்டும் சாலடுகள், குளிர்ச்சியான சூப்புகள், எளிதில் தயாரிக்ககூடிய அதே சமயம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சமைக்கலாம்.

மீதமுள்ள உணவை முறையாக சேமிப்பது:

கோடைக்காலத்தில் முறையான உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். சூடான மீதமுள்ள உணவுகளை அறை வெப்பநிலைக்கு ஆறவிட்டு, குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு முன்பு அவற்றை மூடி வைக்கவும். விரைவில் கெட்டுப் போகக் கூடிய உணவுகளை நீண்ட நேரம் வெளியில் வைத்திருக்காமல் உடனடியாக குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லது.

மின் சாதனங்களில் கூடுதல் கவனம்:

சமையலறையில் பயன்படுத்தும் ஒவ்வொரு மின்சாதனமும் வெப்பத்தை வெளியிடும். LED பல்புகளை பொருத்துவதும், ஓவன், மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்களை வேலை முடிந்ததும் சுவிட்ச் ஆப் செய்வதும் அவசியம். இவை வெப்பத்தை வெளியேற்றும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com