மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்... வெயிலைப் பயன்படுத்தலாம்! கோடைக்கால வீட்டுப் பராமரிப்பு!

save-electricity
save-electricity
Published on

கோடை சீசன் வந்துவிட்டாலே நம் நினைவிற்கு வருவது வற்றல் வடகம் போடுவதுதான். அதையும் தவிர இந்த கோடையில் வேறு என்ன செய்து வைத்துக்கொள்ளலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

வற்றல் போலவே தொக்கு, ஊறுகாய் என வருடத்திற்கு வருவது போல் நிறைய எண்ணெய் விட்டு பதமாக தயார் செய்து வைத்துக் கொள்ள எரிபொருள் தட்டுப்பாடான இந்த சமயத்தில் சாப்பாட்டிற்கு கை கொடுக்கும்.

காய்கறிகளில் கத்தரி, வெண்டை போலவே கோவைக்காய், வெண்டை, மணத்தக்காளி, சுண்டைக்காய், பாகற்காய் என காய்கறிகளை ‌ஆவியில் வேகவிட்டு பின் நன்றாக காயவைத்து எடுத்து வைக்க சமையலுக்கு உதவும்.

பொடி வகைகளுக்கான பொருட்களை நன்கு காயவைத்து அரைத்து, ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைத்துவிட எளிதாக இருக்கும்.

குழம்பு பொடி,தனி பொடி அரைப்பது போலவே இன்ஸ்டன்ட் பொடி வகைகள் உதாரணமாக பருப்பு‌பொடி, வத்தல் குழம்பு பொடி, வறுவலுக்கென மிளகு சேர்த்து அரைத்து பொடியாக தயார் செய்து வைக்க சமையல் செய்ய சுலபமாக இருக்கும்.

மிளகாய், மல்லி, கடுகு போன்ற வருட சாமான்களை இந்த சீசனில் வாங்கி நன்கு காயவைத்து எடுத்து வைக்கும்போது வி எண்ணெய் கையில் தொட்டு கொண்டு நன்கு எல்லா பக்கமும் படும்படி கலந்து பின் பாத்திரத்தில் வைத்துவிட வருடத்திற்கு அப்படியே இருக்கும்.

புது புளி வாங்கி கொட்டை, நார் நீக்கி விட்டு பின் எடுத்து மண் பாத்திரத்தில் வைத்து கொஞ்சம் உப்பு கலந்து உருட்டி வைத்து மஸ்லின் துணியால் மூடி பின் தட்டு போட்டு மூடி வைத்துவிட புளி கருக்காமல் சுவை அப்படியே இருக்கும்.

எண்ணெய் செக்கில் ஆட்டியதை வாங்கி அதில் வெல்லம் ஒரு துண்டை போட்டு மூடி வைத்துவிட நீண்ட நாள் சுவை மாறாமல் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ருசி மட்டும் போதாது... ஆரோக்கியமும் வேண்டும்! இல்லத் தரசிகளுக்கான 'ஸ்மார்ட்' கிச்சன் டிப்ஸ்!
save-electricity

சமையல் அறை முன்னெடுப்புகளை போலவே பிள்ளைகளின் யூனிபார்ம், ஸ்கூல் பேக் சாக்ஸ், ஷு என வருடத்திற்கு ஒருமுறை மாற்றிவிட நன்றாக இருக்கும்.

இந்த கோடை சீசனில் எடுக்கும்படி ஒரு RD கணக்கை ஆரம்பித்து எடுத்துக்கொள்ள அதில் வேகேஷன், வருட சாமான்களை வாங்கி வைக்க சௌகரியமாக இருக்கும்.

பொருட்கள் பராமரிப்பு, சேமிப்பு என்பதைபோல ஒருமுறை பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு முழு உடற்பரிசோதனை செய்வதை வழக்கமாக்கி கொள்ள எந்தவித நோயையும் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்.

ஆன்மீக பயணங்களை பெரியவர்கள் தனியாக போகலாம். பிள்ளைகளை கூட்ட நெரிசலில் அழைத்துச்சென்று சிரமப்படுத்துவதை தவிர்க்கலாம்.

உறவினர்கள் நண்பர்களை இந்த கோடை விடுமுறை காலத்தில் சந்திக்கலாம். செலவு அதிகமாகும் என வீட்டிற்கு அழைக்க யோசித்தால் பொதுவான ஒரு கூட்டமில்லாத டூரிஸ்ட் ஸ்பாட் ல் சந்தித்து சில நாட்களை மகிழ்ச்சியாக கழித்துவிட்டு வரலாம்.

வீட்டு வாகனங்களுக்கு சற்று ஓய்வு கொடுத்து அதாவது சர்வீஸ் செய்து அதை வைத்து விட்டு பொது போக்குவரத்தை உபயோகிக்க செலவு மட்டுப்படுவதோடு உடற்பயிற்சியாகவும் இருக்கும்.

ஏஸி,ஃபேன்,டி வி என எல்லாம் எந்நேரமும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீசனில் ஹீட்டர்,தலை காயவைக்கும் டிரையர், வாஷிங்மெஷினில் ஒன்லி வாஷிங் மோடில் வைத்து துவைத்து விட்டு இந்த வெயிலில் காயவிட என மின்சார செலவை கொஞ்சம் மிச்சம் பண்ணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com