பாராத்தா, பூரி செய்யும்போது அதிக புகை வருகிறதா? இந்த 6 குறிப்புகளைப் பின்பற்றுங்கள்!

Poori Making
Poori Making
Published on

சுடச்சுட பாராத்தா அல்லது பூரி செய்து சாப்பிடணும்னு ஆசைப்பட்டு, இறுதியில் இருமலும், கண் எரிச்சலும்தான் மிச்சமா இருக்கும். அதனாலேயே நிறைய பேர் இந்த பலகாரங்களை செய்யவே யோசிப்பாங்க. ஆனா கவலைப்படாதீங்க. சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், இனி புகை இல்லாமல், சந்தோஷமா பாராத்தா, பூரி செய்யலாம். இந்த 6 குறிப்புகள் உங்களுக்கு நிச்சயமா உதவும்.

1. சரியான எண்ணெய் தேர்வு ரொம்ப முக்கியம்:

நம்ம சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் ரொம்ப முக்கியம். அதிக சூட்டில் புகை வராத எண்ணெய்களை (High Smoke Point Oils) பயன்படுத்துவது நல்லது. ரீஃபைண்ட் ஆயில், கடலை எண்ணெய், அல்லது சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். நெய் கூட நல்ல தேர்வுதான், ஆனால் அதுவும் அதிக சூட்டில் புகை வரும். எனவே, நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயின் புகை வராத தன்மையை (Smoke point) தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

2. அடுப்பின் தீயைக் கவனியுங்கள்:

பாராத்தா, பூரிக்கு எப்பவுமே மிதமான தீயில் சுடுவதுதான் நல்லது. அதிக தீயில் வைத்தால், எண்ணெய் சீக்கிரமாக சூடாகி புகை வரும். மிதமான தீயில் பொறுமையாக சுடும்போது, உணவு சீராக வேகும், புகையும் வராது. சிலசமயம் அவசரத்தில் அதிக தீ வைத்துவிடுவோம், அதுதான் புகைக்கு முக்கிய காரணம்.

3. தோசைக்கல்லின் வெப்பம்:

தோசைக்கல் சரியான சூட்டில் இருக்க வேண்டும். கல் சரியாக சூடாகாமல் எண்ணெய் ஊற்றினால், அது சீக்கிரம் சூடாகி புகை வர வாய்ப்பு உண்டு. அதேசமயம், கல் அளவுக்கு அதிகமாக சூடாகி இருந்தாலும் புகை வரும். ஒரு துளி தண்ணீரை விட்டு, அது உடனே ஆவியாகிவிட்டால், கல் சரியான சூட்டில் இருக்கிறது என்று அர்த்தம்.

4. எண்ணெயின் அளவு ரொம்ப முக்கியம்:

அதிக எண்ணெய் ஊற்றினால் அது புகையை உண்டுபண்ணும். தோசைக்கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் போதுமானது. பூரி பொரிக்கும் போது, எண்ணெய் சரியான அளவில் இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால், அது சூடாகி புகை கிளம்பும். குறைவாக இருந்தால் பூரி சரியாக உப்பாது. அளவான எண்ணெய் உபயோகிப்பதே சிறந்தது.

5. காற்றோட்டம் இருக்கட்டும்:

சமையலறை காற்றோட்டமாக இருப்பது அவசியம். ஜன்னல்களைத் திறந்து வைக்கலாம் அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனைப் பயன்படுத்தலாம். புகை அதிகமாக வரும்போது, காற்றோட்டம் இருந்தால் அது வெளியேறிவிடும். மூடிய சமையலறையில் சமைப்பது புகையை வீட்டுக்குள் குமித்துவிடும்.

இதையும் படியுங்கள்:
ரசித்து ருசிக்க வைக்கும் எளிய சமையல் குறிப்புகள்!
Poori Making

6. அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்:

சமையல் செய்யும் பாத்திரங்கள், தோசைக்கல் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். எண்ணெய் பிசுக்கு அல்லது உணவுத் துகள்கள் ஒட்டியிருந்தால், அவை சூடாகி புகையை உருவாக்கலாம். சுத்தமான பாத்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் புகையைக் குறைக்கலாம்.

இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றினால், இனி பாராத்தா, பூரி செய்யும்போது புகையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இதை முயற்சித்து பார்த்து உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com