உண்பதற்கு முன் ஊறவைக்க வேண்டியவைகள்!

dry fruits...
dry fruits...
Updated on

கசகசா (Poppy Seeds): 

கசகசாவில் வைட்டமின் B சத்து அதிகம் உள்ளது. இது மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெறவும், கொழுப்புகள் எரிக்கப்பட்டு எடை குறையவும் உதவும். கசகசாவை ஊற வைத்து அரைத்து சமையலில் சேர்த்து உண்ணும் போது, உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்புகள் கரையும்.

வெந்தயம்:

வெந்தயத்தில் நார்ச்சத்து மிக அதிகம் உள்ளது. இது ஜீரண மண்டல உறுப்புகளை நன்கு சுத்திகரிக்க உதவும். இரவில் ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அதை குடித்து வந்தால் குடல் இயக்கம் சீராகும்.

ஃபிளாக்ஸ் சீட்ஸ்:

இந்த விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இதை ஊற வைத்து உண்ணும்போது அவை, உடலில் அதிகப்படியாக சேர்ந்திருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறையச் செய்யும்.

பாதாம் பருப்புகள்:

இவற்றை இரவில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து காலையில் உண்ணும்போது இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம்  சமநிலைப்படும். கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும். ஊற வைத்த பாதாம் பருப்புகள் மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவும். இப்பருப்பை ஊற வைத்து உண்பதால் செரிமானம் சுலபமாகும்.

உலர் திராட்சை (Raisins): 

உலர் திராட்சைகளை இரவில் ஊறவைத்து காலையில் உண்பதால்  நம் சரும ஆரோக்கியம் மேன்மை அடையும். சருமம் பளபளப்பு பெறும்.

இதையும் படியுங்கள்:
மகிழ்வுடன் செயல்படுங்கள்! மனம் மகிழுங்கள்!
dry fruits...

பீநட் (Ground Nut) :

வேர்க்கடலைப் பருப்புகளை ஊறவைத்து உண்பதால் இதய ஆரோக்கியம் பலம் பெறும். இதய இரத்த நாளங்களின் செயல்பாடுகள் சிறக்கும்.

அத்திப் பழம்:

தினசரி ஒரு ஊறவைத்த அத்திப்பழம் உண்பதால் எலும்புகள் பலமடையும்; நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

logo
Kalki Online
kalkionline.com