இப்படி சப்பாத்தி செஞ்சா 2 நாள் ஆனாலும் Soft-ஆ இருக்கும்! 

Soft Chapati making recipe
Soft Chapati making recipe

இந்திய உணவுகளில் சப்பாத்தி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. ஏனெனில் சப்பாத்தி எல்லா வயதினரும் விரும்பி உண்ணக்கூடியது, எளிதில் தயாரித்து விடலாம் மற்றும் பல்வேறு உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். சூடான சப்பாத்தி குருமா, சட்னி, சாம்பார், பருப்பு வகைகள் போன்றவற்றுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும். 

ஆனால் சிலருக்கு சப்பாத்தி செய்யும்போது அது மிருதுவாக வராமல் கடினமாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகவே உள்ளது. இந்தப் பதிவில் மிருதுவான சப்பாத்தி செய்வதற்கான சில முக்கிய குறிப்புகளைப் பார்ப்போம். இவ்வாறு சப்பாத்தி செய்தால் 2 நாட்கள் வரை கூட மிருதுவாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு - 2 கப்

  • உப்பு - தேவையான அளவு

  • தண்ணீர் - தேவையான அளவு

  • எண்ணெய் - 2 டீஸ்பூன் (மாவு பிசைவதற்கு)

  • நெய் - சப்பாத்தி மேல் தடவ

செய்முறை: 

ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள். இப்போது அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசையவும். மாவு கையில் ஒட்டாமல் இருக்கும் வரை நன்கு பிசையுங்கள்.‌ 

பின்னர் பிசைந்த மாவில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மேலும் நன்றாகப் பிசைய வேண்டும். இவ்வாறு செய்தால் சப்பாத்தி மிருதுவாக வரும். அதிகமாக எண்ணெய் சேர்க்க வேண்டாம் அது உடலுக்குக் கெடுதல். மாவை பிசைந்ததும் ஈரமான துணியால் மூடி 30 நிமிடங்கள் அப்படியே ஊறவிடுங்கள். 

பின்னர் அந்த மாவை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து மெல்லிய சப்பாத்திக்களாக தட்டிக் கொள்ளவும். இப்போது ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து, தட்டி வைத்துள்ள சப்பாத்தியை தவாவில் வைத்து வேக வைக்கவும். 

இறுதியில் சப்பாத்தியில் நெய் தடவி சுடச்சுட பரிமாறினால் வேற லெவல் சுவையில் இருக்கும். 

இதையும் படியுங்கள்:
Meal Maker Gravy: சப்பாத்தி, பூரிக்கு ஏத்த சூப்பர் சைட் டிஷ்! 
Soft Chapati making recipe

குறிப்புகள்: எப்போதுமே சப்பாத்தி செய்வதற்கு கோதுமை மாவு மட்டும் பயன்படுத்தவும். மாவு பிசையும் போது சரியான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். அதிகமாக தண்ணீர் சேர்த்தால் சப்பாத்தி கடினமாக இருக்கும். சப்பாத்தி தட்டும் போது கொஞ்சமாக மைதா மாவு சேர்த்தால் சப்பாத்தியை எளிதாகத் தட்டலாம். தவாவில் சப்பாத்தியை போடும்போது தவா சூடாக இருக்க வேண்டும் இல்லையேல் சப்பாத்தி, சரியாக வேகாமல் கடினமாக மாறிவிடும். 

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் சப்பாத்தி செய்தால், மிகவும் மென்மையாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com