சமையலுக்கு ருசியைக் கூட்ட அட்டகாசமான சில டிப்ஸ்கள்!

Some great tips to cooking!
Healthy samayal tipsImage credit - pixabay
Published on

ரிசி உப்புமா செய்யும்போது அரிசி ரவையில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசிறி வைத்து உப்புமா  செய்ய உப்புமா பொல பொல என உதிரியாக வரும்.

றிவேப்பிலை, புதினா, மல்லித்தழை, முருங்கை இலை இவற்றை வெயிலில் நன்கு காயவைத்து தனித்தனியாக

பொடி செய்து வைத்துக்கொள்ளவும். சாம்பார், கூட்டு செய்யும் போது தேவையான பொடிகளை போடலாம்.

த்தக்  குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் தேங்காய்ப்பால் சேர்த்து விட்டால் சரியாகும்.

கிரேவியில் நெய்க்குப் பதில் வெண்ணெய் சேர்த்து செய்தால் மணமும் சுவையும் அபாரமாக இருக்கும்.

டைக்கு பருப்புடன் சிறிது சவ்வரிசி, கோதுமையை ஊற வைத்து  அரைத்து சேர்த்தால் பொறு மொறுப்பாக இருக்கும்.

வெங்காய பக்கோடா செய்யு மாவு பிசையும்போது வறுத்த நிலக்கடலையை பொடிசெய்து சேர்த்து கலந்தால் பக்கோடா மொறு மொறுப்பாக சுவையாக இருக்கும்.

சாம்பார் வாசனையாக இருக்கவேண்டுமா? கொதிக்கும்போது அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை தாளித்து போட சுவை, மணமும், தூக்கும்.

த்தக் குழம்பில் கார்ன் ஃபிளவர் மாவைக் கரைத்து சேர்த்தால் சுவை சற்று தூக்கலாக இருக்கும்.

வெண்ணெய் காய்ச்சிய வாணலியில்  உருளைக்கிழங்கை பொடிமாஸ் செய்தால் சுவையாக இருக்கும்.

ட்லெட் செய்ய கைவசம் ரொட்டித்தூள் இல்லையென்றால் பொரித்த அரசியையை மாவாக்கி செய்தால் பொறு பொறுவெள இருக்கும்.

ந்த பாயாசம் செய்தாலும் 2 டீஸ்பூன் பாதாம் பவுடர் அல்லது குலோப் ஜாமூன் பவுடர் சேர்த்து செய்தால் பாயசம் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான ரவா அல்வா-சோயா சிப்ஸ் செய்யலாம் வாங்க!
Some great tips to cooking!

ட்லிப்பொடி அரைக்கும்போது சிறிது வறுத்த நிலக்கடலை சேர்த்து அரைத்தால் சுவை அபாரமாக இருக்கும்.

ப்பம் அரைக்கும்போது  ஊறவைத்த பச்சரிசியுடன் ஒரு மூடி தேங்காய் துருவல், ஒரு கரண்டி பழைய சாதம் இவற்றைப்  போட்டு அரைத்தால் ஆப்பம் வாசனையாகவும் மிருதுவாகவும் இருக்கும்

தோசை தவாவில் எண்ணெய் தடவி அப்பளத்தைப் போட்டு இரு புறமும் புரட்டி எடுத்தால் சுவையாக இருக்கும். எண்ணெய் செலவும் குறையும்.

கோதுமை தோசை செய்யும்போது ஒரு டம்ளர் மோரில் மாவைக்கரைத்து தோசை சுட்டால் தோசை அவையுடன், மெதுவாகவும் இருக்கும்.

ஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக்கி எலுமிச்சைசாறு, உப்பு சேர்த்து  குலுக்கி வைத்து ஊறிய பின் தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். உணவும் எளிதில் ஜீரணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com