உச் கொட்டி ருசிக்க ஜோரான திருநெல்வேலி சொதியும், கேரள அவியலும்!

Tirunelveli sothi and Kerala avial to taste!
Aviyal recipesImage credit - youtube.com
Published on

திருமணங்களுக்கு கேரளா சென்றால் அவியல் நிச்சயம் இருக்கும். தேங்காய் எண்ணெய் மணக்க கேரளா அவியல் என்றால் ஒரு பிடி பிடிக்கலாம். அதேபோல் திருநெல்வேலி சென்றால் இந்த சொதியை கேட்டு சாப்பிடலாம். ஏனெனில் இது திருநெல்வேலி ஸ்பெஷல். திருமணம் ஆன புது மாப்பிள்ளைக்கு இது செய்வார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். இதோ ருசிக்க திருநெல்வேலி சொதியும் கேரளா அவியலும்.

திருநெல்வேலி சொதி

தேவை:

உருளைக்கிழங்கு-  3 அல்லது 4 முட்டைகோஸ் - ஒரு கப்
முருங்கைக்காய்- 2
பாசிப்பருப்பு வறுத்தது-  ஒரு கப்
பச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
இஞ்சி -சிறு துண்டு
சின்ன வெங்காயம் - 15
பூண்டு- 5 பல்
மஞ்சள்தூள்- அரை டீஸ்பூன்
தேங்காய்-   ஒன்று
எலுமிச்சைச் சாறு 
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை:
தேங்காயைத் துருவி ஒரு டம்ளர் நீர் சேர்த்து அரைத்து கெட்டியான பால் எடுத்து தனியாக வைக்கவும், இரண்டாவது மூன்றாவது முறை பிழியும் பாலை ஒன்று சேர்த்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை உரித்து அதனுடன் அறிந்த காய்கறிகளை உப்பு போட்டு வேகவைத்து தனியாக வைக்கவும். வறுத்த பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள்,  பச்சை மிளகாய், வெள்ளை பூண்டை சேர்த்து மசிய வேகவிடவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இரண்டாவது மூன்றாவது தேங்காய்ப்பால் எடுத்ததை விட்டுக் கிளறிவிடவும். கொதிவரும் சமயம் இஞ்சியை தட்டி சாறு எடுத்து விடவும். அடிப்பிடிக்காமல் பக்கத்திலிருந்து கிளறவேண்டும். கொதித்தவுடன் முதல் தேங்காய் பாலை விட்டு கொதி வரும் முன் விட்டு கொதிக்கும் முன்னரே இறக்கவும்.

ஒரு கரண்டியில்  எண்ணெய் விட்டு அதில் கடுகு, கருவேப்பிலை தாளித்து எலுமிச்சம் பழ சாறை சேர்க்கவும். இதற்கு கருப்பு திராட்சை இருந்தால் ஒவ்வொன்றாக உதிர்த்து குழம்பில் போட்டாலும் நன்றாக இருக்கும். இந்த சாதம் சப்பாத்தி இடியாப்பம் இட்லி, தோசை என எல்லா வகை உணவிற்கும் பொருந்தும்.

கேரளா அவியல்

தேவை:

சேனைக்கிழங்கு - 100 கிராம் கத்தரிக்காய் - 100 கிராம்
வாழைக்காய் - 1
மாங்காய் - 1 சிறியது
தடியங்காய் - 1 நீள்துண்டு
பச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்ப முருங்கைக்காய்-  1 அல்லது 2
சீனி அவரைக்காய்- 100 கிராம் உருளைக்கிழங்கு -கால் கிலோ
பூண்டு - 6 பல்
சீரகம் -2 டீஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி

இதையும் படியுங்கள்:
நெல்லூர் போண்டாவும், ஜவ்வரிசி அல்வாவும் - செம டேஸ்ட் போங்க!
Tirunelveli sothi and Kerala avial to taste!

செய்முறை:
சீனி அவரைக்காயை இரண்டு அல்லது மூன்று பாகமாக வெட்டவும். அதே அளவிற்கு எல்லா காய்கறிகளையும் நீளத்துண்டுகளாக வெட்டி மாங்காயை பெரிய துண்டுகளாக வெட்டவும். மாங்காய் புளிப்பாக இருந்தால் சிறு சிறு துண்டுகளாகவும் போடலாம். காய்கறிகளை ஒன்றாக சேர்த்து உப்பு மஞ்சள்தூள் போட்டு வேக விடவும்.  தேங்காயைத்  துருவி  சீரகம், பூண்டு , மிளகாய் சேர்த்து  கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். காய்கறி வெந்தவுடன் அரைத்த தேங்காயை போட்டு கொதித்தவுடன் தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் இரண்டு டீஸ்பூன் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை, மல்லித்தழை போட்டு புளிப்பிற்கு ஏற்ப கொஞ்சம் தயிர் விட்டு கிளறி இறக்கி மூடவும். இதனை சாதத்திற்கும் பூரி, சப்பாத்தி, அடைக்குத் தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com