உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தவாறு வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சுவையான மொறு மொறுவென கோதுமை போண்டா எப்படி செய்யலாம். இதோ இப்படி செஞ்சு கொடுங்க ஹாப்பியா சாப்பிடுவாங்க...
தேவையானவை:
நல்ல கெட்டித் தயிர். – 3 கப், சன்னமான கோதுமை ரவை (சுத்தம் செய்தது) - 2 கப், மிளகு – சீரகப்பொடி - 1 டீஸ்பூன், பெருங்காயப் பொடி – ¼ டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6, இஞ்சி 1 துண்டு, ஃப்ரெஷ் கொத்தமல்லி இலை - 1 கப், ரீஃபைண்டு ஆயில் - ¼ லிட்டர், தேங்காய் எண்ணெய் - 2. டேபிள்ஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1 கப், உப்பு – தேவையானது.
செய்முறை:
* முதலில், கெட்டித் தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிடவும். தண்ணீர் வடிந்தபின், அதை சிறிது வாயகன்ற பாத்திரத்தில் விடவும்.
* பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்த் துருவல், சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து தயிரில் சேர்க்கவும்.
* பின்னர் பெருங்காயப் பொடி, மிளகு - சீரகப் பொடி, கோதுமை ரவை, தேவையான உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவைகளையும் தயிரில் சோ்த்து, நன்கு மிக்ஸ் செய்து சுமார் பத்து நிமிடங்கள் வைக்கவும்.
* வாணலியில் ரீஃபைண்டு ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயை விட்டு நன்றாகக் காயவிடவும். பிறகு தயார் செய்து வைத்திருக்கும் மாவை சிறுசிறு பந்து போல உருட்டி நாலு நாலாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேகவைத்து இருபுறமும் திருப்பிப் போட்டு வெளியே எடுக்கவும்
* கமகம வாசனையுடனும் அருமையான சுவையுடன் இருக்கும். அத்துடன், இந்தக் கோல் போண்டாவிற்கு தொட்டுக்க சட்னி கூடத் தேவையில்லை. அனைவரும் அப்படியே விரும்பிச் சாப்பிடுவார்கள்.