கலக்கலான சுவையில் கீரை ரெசிபிகள்!

மேத்தி புலாவ்
மேத்தி புலாவ்Image credit- youtube.com

மேத்தி புலாவ்

தேவை:

பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை - 1 கப்

பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி - 1 1/2 கப்

உப்பு, எண்ணெய் - தேவையானது.

பனீர் துண்டுகள் - 1/4 கப்

பச்சை பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

அரைக்க:

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறிது

பூண்டு பல் - 3

சோம்பு - 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

பட்டை - சிறிது

பிரியாணி இலை - சிறிது

நைசாக அரைக்கவும்.

செய்முறை:

வாணலியில் அரிசியை லேசாக வறுத்து எடுக்கவும்.

குக்கரில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெந்தயக் கீரையையும் சேர்த்து வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

3 கப் தண்ணீர் ஊற்றி பட்டாணி சேர்க்கவும். பின் அரிசியையும் சேர்த்து கலந்து மூடி வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பனீர் துண்டுகளை போட்டு பொரிக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து பொரித்த பனீர் துண்டுகளை போட்டு கலக்கவும். ருசியான மேத்தி புலாவ் தயார்.

இதை தயிரில் வெள்ளரி சேர்த்த பச்சடியுடன் தொட்டு சாப்பிடலாம். வெந்தயக் கீரை வயிற்று உபாதைகளுக்கு நல்லது.

அகத்திக் கீரை உசிலி

தேவை:

அரிந்த அகத்திக் கீரை - 2 கப்

சாம்பார் வெங்காயம் - 6

பயத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

துவரம்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் - 2

கடுகு - சிறிது, பெருங்காயம் - சிறிது

மஞ்சள் தூள் - சிறிது

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் கழுவி மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற விட்டு நீரை வடித்து விட்டு உப்பு சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பாக அரைக்கவும்.

இதில் மஞ்சள் தூள் சேர்த்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
இரண்டு நந்திகள் உள்ள கோவில் எங்க இருக்கு தெரியுமா?
மேத்தி புலாவ்

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதக்கி அகத்திக் கீரையை சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த பருப்பை சேர்த்து அளவான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

இடையிடையே கிளறி கீரையும், பருப்பும் ஒன்றாக சேர்ந்ததும் இறக்கவும். அகத்திக் கீரை உசிலி தயார்.

இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இது வாய்ப்புண், வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com