இரண்டு நந்திகள் உள்ள கோவில் எங்க இருக்கு தெரியுமா?

சுக்ரீஸ்வரர் கோவில்
சுக்ரீஸ்வரர் கோவில்

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமருக்கு உதவியாய் இருந்த சுக்ரீவன் இங்குள்ள ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்ற பெயர் வந்தது. இதற்குச் சான்றாக ஆலயத்தில் அர்த்தமண்டபத்தில் சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்பு சிற்பம் உள்ளது.

மூலவர் சுக்ரீஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளி உள்ளார். வலது புறம் ஆவுடை நாயகியாக அம்மன் கோவில் கொண்டுள்ளார். எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் உள்ளார்.

நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் பஞ்சலிங்கங்கள் இருந்த கோவிலில் அமைந்துள்ளன மூலவராக அக்னி லிங்கம் மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ் ஐந்தாவது ஆகாச லிங்கம் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு காது இருக்காது. கோவில் நந்தி அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து மாட்டின் காதையும் கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் பாய்ந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த விவசாயி தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கி உள்ளார்.

சுக்ரீஸ்வரர் கோவில்
சுக்ரீஸ்வரர் கோவில்

பின் தவறுக்கு பிராயச்சித்தமாக மற்றொரு நந்தி சிலை செய்து புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளனர். மறுநாள் வந்து பார்த்தபோது பழைய நந்தி முன்பும் புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
கண்களுக்கு கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க பயனுள்ள 6 டிப்ஸ்!
சுக்ரீஸ்வரர் கோவில்

சிவன் விவசாயியின் கனவில் வந்து உறுப்புகள் இல்லை என்றாலும் அதுவும் உயிர்தான் எனவும் பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும் மற்றது பின்னால்தான் எனக் கூறியதாக வரலாறு. அதன் அடிப்படையில் இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில் இரண்டு நந்திகள் சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com