வீட்டிலேயே செய்யலாம் கமகமக்கும் கோயில் பிரசாதம்: அக்கார வடிசல் & ஜீரா ரெசிபிகள்!

srirangam-temple-prasadam
srirangam-temple-prasadam
Updated on

கோவில் பிரசாதம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். 

கோவில் ஸ்பெஷல் ஜீரா பிரசாதம்

தேவையான பொருட்கள்: 

ரவை                      -  300 கிராம் 

கற்கண்டு              -  50 கிராம் 

நாட்டு சக்கரை      -   80 கிராம் 

பச்சைக் கற்பூரம்   -   சிறிதளவு 

நெய்                       -     தேவையான அளவு 

ஏலக்காய் பொடி  -     தேவையான அளவு

செய்முறை :

ஒரு வாணலியில் நெய் ஊற்றி ரவையை நன்கு சிவந்து வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும். ரவை நன்கு வெந்து வந்தவுடன் கொதிக்க வைத்த நீரை சேர்த்து நன்கு கிளரி கொடுக்கவேண்டும். ரவை பஞ்சு போல் வெந்து வந்தவுடன் கற்கண்டு, நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். சிறிதளவு பச்சை கற்பூரம், ஏலக்காய் பொடி சேர்த்து தேவையான அளவு நெய் ஊற்றி நன்கு கிளரி கொடுக்கவேண்டும். பச்சைக் கற்பூரம் சிறிய கடுகு அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.அதிகமாக சேர்க்கக் கூடாது. கமகமக்கும் ஸ்ரீரங்கம் கோவில் ஸ்பெஷல் ஜீரா பிரசாதம் தயார்.

ஸ்ரீரங்கம் கோவில் பிரசாதம் அக்கார வடிசல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: 

பச்சரிசி                 -    50 கிராம் 

பாசிப்பருப்பு         -     50 கிராம் 

பால்                      -    1  லிட்டர் 

வெல்லம்              -    80 கிராம் 

பச்சைக் கற்பூரம்  -  தேவையான அளவு 

ஏலக்காய் பொடி   -   தேவையான அளவு 

நெய்                      -      தேவையான அளவு

செய்முறை: 

பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவி வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்தவுடன் ஒரு குக்கரில் தேவையான அளவு நெய் ஊற்றி பச்சரிசி, பாசிப்பருப்பை நன்கு சிவந்து வரும் வரை வறுத்து பால் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் நன்கு மசித்து கொடுக்கவேண்டும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பாகாக கரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சையை நன்கு சிவந்து வரும் வரை பொரித் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
தக்காளி சட்னி போரடிக்குதா? வேர்க்கடலை சேர்த்து ஒருமுறை இப்படி அரைச்சு பாருங்க!
srirangam-temple-prasadam

வெல்லம் கரைத்த பாகில் பச்சரிசி பாசிப்பருப்பு கலவையை சேர்த்து சிறிதளவு பச்சை கற்பூரம், ஏலக்காய் பொடி வறுத்து வைத்திருந்த முந்திரி, திராட்சை சேர்த்து தேவையான அளவு நெய் ஊற்றி  நன்கு கிளரி கொடுக்க வேண்டும். அக்கார வடிசலுக்கு நெய் சற்று அதிகமாகவே சேர்ப்பது மிகுந்த சுவையை கொடுக்கும். நெய் மணக்கும் ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம்  அக்கார வடிசல் தயார். இதை நம் வீடுகளில் பெருமாளுக்கு நெய் வைத்தியமாக வைத்து வழிபடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com