

ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையானவை:
(6 பேருக்கு) முக்கால் கிலோ கோதுமை மாவு.
2 சிட்டிகை உப்பு
1 கிலோ உருளைக்கிழங்கு.
வெங்காயம் நறுக்கியது. (வேண்டும் என்றால்)
4 பல் பூண்டு
நறுக்கிய பச்சை மிளகாய்
தாளிக்க வேண்டிய சாமன்கள்
சிறிது வெண்ணைய்.
முதலில் கூக்கரில் கிழங்கை வேகவைக்கவும். விசில் வந்ததும் எடுத்து ஒரு தனி பாத்திரத்தில் வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளியுங்கள். கருவேப்பிலையை கிள்ளி போடுங்கள். சிட்டிகை உப்பு. இப்போது வெந்த கிழங்கை நன்றாக கையினால் பிசைந்து மசியுங்கள். வாணலியில் போட்டு வதக்குங்கள். தண்ணீர் ஊற்ற கூடாது. மசித்த கிழங்கை வாணலியில் போட்டு கலக்கி பதம் வந்தவுடன் இறக்கி வையுங்கள். இப்போது ஸ்டஃப் (உள்ளே வைக்கும்) ரெடி.
அடுத்து சப்பாத்தி மாவை வெது வெது நீரில் நன்கு பிசையுங்கள். சப்பாத்தி மெருதுவாக வர உருக்கிய வெண்ணெய் கலந்து நன்கு பிசையுங்கள். இப்போது எல்லாம் ரெடி சப்பாத்தி செய்ய வேண்டியதுதான்.
மாவை உருண்டை உருண்டையாக செய்து வையுங்கள். இப்போது ஒரு உருண்டை எடுத்து கோதுமை மாவில் தூவி சப்பாத்தி கல்லில் உருட்டு கட்டையால் நன்றாக உருட்டங்கள். அதாவது ஸ்டஃப் செய்த பிறகு, உருட்டிய சப்பாத்தியை நான்காக மடியுங்கள். ஒரு கூம்பு வடிவில் உருண்டை வந்துவிடும். பின் லேசாக சப்பாத்தியை உருட்டுங்கள். ஒரு அளவு வட்டமான சப்பாத்தி வந்ததும் அதில் வெண்ணெய் தடவி மசாலை (மூன்று ஸ்பூன்) சப்பாத்தி நடுவில் வைத்து… சப்பாத்தியை மூடுங்கள்.
அதாவது மசாலா உள்ள சப்பாத்தி கும்பு வடிவமாக ஆகவேண்டும். இப்போது முக்கோண வடிவில் உள்ள சப்பாத்தியை சப்பாத்தி உருட்டுகட்டையால் மெதுவாக உருட்டுங்கள். மாசால் வெளியே வரக்கூடாது. நீங்கள் மெதுவாக உருட்டினால் சதுரம்போல அல்லது முக்கோண வடிவில் சப்பாத்தி இருக்கும்.
அதை தோசை கல்லில் போட்டு சுடுங்கள். சப்பாத்திக்கு வெண்ணெய் தேய்த்தால் சுவை அதிகமாக இருக்கும். இப்போது ஒரு சப்பாத்தி ரெடி. இல்லை. ஒரு ஸ்ட்ஃப்ட் சப்பாத்தி ரெடி. இப்படியே சப்பாத்தியை சுடுங்கள். அரைமணி நேரம் ஆகும். இப்போது ஸ்டஃப்ட் சப்பாத்தி ரெடி.
தொட்டுக்க… மிக எளிது.
3 கப் தயிர் எடுத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, சிறு சிறு துண்டுகளாக வெட்டிய வெங்காயத்தை அதில் போட்டு கலக்குங்க.. சிட்டிகை உப்பு மறக்காதீர்கள்.