சர்க்கரைவள்ளிக்கிழங்கு திணை பொங்கலும், அவல் மிக்ஸரும்!

சர்க்கரைவள்ளிக்கிழங்கு திணை பொங்கல்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு திணை பொங்கல்
Published on

ர்க்கரைவள்ளிக் கிழங்கில் கூட்டு, பொரியல், வடை  கட்லட் என்று வகை வகையாகச் செய்வோம். பொங்கல் செய்ய முடியுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழும். கட்டாயமாக நன்றாக இருக்கும். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்களேன். 

சர்க்கரை வள்ளி கிழங்கு பொங்கல்:

செய்ய தேவையான பொருட்கள்:

திணையரிசி -அரை கப் 

பயத்தம் பருப்பு-1/2கப்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு பெரியது -ஒன்று  அரிந்தது

பெரிய வெங்காயம் -ஒன்று அரிந்தது

மிளகு ,சீரகம் தலா -ஒரு டீஸ்பூன்

ஒடித்த முந்திரி பருப்பு -ஒரு டேபிள் ஸ்பூன் 

வெள்ளரி விதை - சிறிதளவு 

பொடியாக நறுக்கிய இஞ்சி -ஒரு டீஸ்பூன் 

 கருவேப்பிலை கொத்தமல்லி தழை- சிறிதளவு

எண்ணெய், நெய் தலா- ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:

குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி மிளகு, சீரகம் தாளிக்கவும். பிறகு  முந்திரியை வறுக்கவும். பின்னர் பொடியாக அரிந்த வெங்காயம், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து வதக்கி, கிழங்கை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி விட்டு அரிசி பருப்பை சேர்த்துக் கிளறி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி 3,4 விசில் விட்டு எடுக்கவும். வெள்ளரி விதையை தூவி பரிமாறவும். 

இதன் கலர் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். மணமும் ருசியும் அசத்தலாக இருக்கும். தேங்காய் சட்னி, கடலை சட்னியுடன் சேர்த்து சாப்பிட ருசி அள்ளும். இதேபோல் வரகு, சாமை, போன்ற அனைத்து சிறு தானிய வகைகளிலும்  பச்சரிசி மற்றும் குருணையிலும் செய்து சாப்பிடலாம்.

அவல் மிக்ஸர்: 

தேவையான பொருட்கள்:

 தட்டை அவல்-3கப்

வேர்க்கடலை -கால் கப்

பொட்டுக்கடலை- கால் கப்

பாதாம் பருப்பு- 10

முந்திரி பருப்பு -10

காய்ந்த திராட்சை 10

கருவேப்பிலை -ஒரு கைப்பிடி

மிளகு,மிளகாய்த்தூள் தலா -ஒரு டீ ஸ்பூன்

பெருங்காயத்தூள் விருப்பப்பட்டால்- சிறிதளவு

 உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப

இதையும் படியுங்கள்:
சுருள் சுருளான ‘முடி’ வேணுமா? சுருட்டை ‘முடி’யை நேராக்கணுமா? நேர் ‘முடி’யை அலைகள்போல் மாற்றணுமா? எல்லாமே ‘முடி'யுமே!
சர்க்கரைவள்ளிக்கிழங்கு திணை பொங்கல்

செய்முறை:

ஒரு கடாயில்  தேவையான அளவு எண்ணெயை காய விட்டு அவலை சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும். பிறகு ஒரு வலை கரண்டியில் வேர்க்கடலை முதல் கருவேப்பிலை வரை சிறிது சிறிதாகப் போட்டு கொதிக்கும் எண்ணெயில் அதை மூழ்கும் வரை பொரித்தெடுத்து அவலுடன் சேர்க்கவும். இவை சூடாக இருக்கும் பொழுதே உப்பு, மிளகு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஆறவிடவும். ஆறியதும் காற்று புகாத டப்பாவில் அடைத்து  வைத்து பயன்படுத்தவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com